வைகை கரை உடைந்தது; 15 கிராமங்களில் வெள்ளம்

வைகை கரை உடைந்தது; 15 கிராமங்களில் வெள்ளம்

1 mins read
42398e04-0b48-4c44-b838-72c6d1134814
ராமநாதபுரத்தில் உடைப்பு ஏற்­பட்டு கிரா­மங்­க­ளுக்­குள் தண்­ணீர் புகுந்­தது. இருகரையிலும் மக்கள் நிற்கின்றனர். படம்: ஊடகம் -

ராம­நா­த­பு­ரம்: வைகை அணை யில் இருந்து திறந்­து­வி­டப்­பட்ட உபரிநீர் ராம­நா­த­பு­ரம் அருகே 15க்கும் மேற்­பட்ட கிரா­மங்­களில் புகுந்­ததால் போக்குவரத்து பாதிக்­கப்­பட்­டது. மின்­சா­ரமும் துண்­டிக்கப்பட்டதால் மக்­கள் பரி­த­வித்து வரு­கின்­ற­னர்.

வைகை அணை முழு கொள்­ள­ளவை எட்­டி­யதை அடுத்து வினா­டிக்கு 12,000 கன­அடி உப­ரி­நீர் திறந்­து­வி­டப்­ப­டு­கிறது. இந்த நீர் ராம­நா­த­பு­ரம் பெரிய கண்­மாய், சக்­க­ரக்­கோட்டை கண்­மாய், 100 சிறு, குறு கண்­மாய்­களில் தேக்­கப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், வைகை ஆற்­றில் திறக்­கப்­பட்ட வெள்­ளம் ராம­நா­த­பு­ரம் காரு­குடி மத­கணை பகு­தியை நேற்று முன்­தி­னம் வந்­த­டைந்­தது. அப்­போது கரை­யில் உடைப்பு ஏற்­பட்டு கிரா­மங்­க­ளுக்­குள் தண்­ணீர் புகுந்­தது.

இத­னால் ராம­நா­த­பு­ரம் அருகே உள்ள மென்­னந்தி, ஆர்.காவ­னூர், புல்­லங்­குடி, முத­லூர் உள்­பட 15க்கும் மேற்­பட்ட கிரா­மங்­கள் வெள்­ளத்­தால் சூழப்­பட்­டது. ஆர்.காவ­னூர் துணை மின்­நி­லை­யத்­திற்­குள்­ளும் வெள்­ளம் புகுந்­த­தால் 60க்கும் மேற்­பட்ட கிரா­மங்­களில் கடந்த இரு நாட்­க­ளாக மின்­சா­ரம் தடை­பட்­டுள்­ளது.

வெள்­ள­நீர் புகுந்­த­தால் 600 ஏக்­கர் நிலப்­ப­ரப்­பில் பயி­ரி­டப்­பட்­டி­ருந்த மிள­காய் உள்­ளிட்ட பயிர்­கள் நாச­மா­யின. இத­னால் விவ­சா­யி­கள் கவலை அடைந்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே, காவிரி டெல்டா மாவட்­டங்­களில் மழை­நீர் தொடர்ந்து வய­லில் தேங்­கி­ய­தால் 50,000 ஏக்­க­ர் நெற்­ப­யிர்­கள் அழுகி வீணா­கி­யுள்­ளன. இத­னால் விவ­சா­யி­கள் வேதனை அடைந்­துள்­ள­னர்.