சேவையைத் தொடங்கிவைத்து பேருந்து ஓட்டிய அமைச்சர்

சேவையைத் தொடங்கிவைத்து பேருந்து ஓட்டிய அமைச்சர்

1 mins read
2037414d-6b5b-417e-85a8-bd2b8c5f7416
திருவண்ணாமலை மாவட்டம், குடலூர் கிராமத்தில் பிறந்தவர் அமைச்சர் எ.வ.வேலு. தமிழ் இலக்கியத்தில் பட்டம்பெற்றவரான இவர், ஆரம்பகாலத்தில் பேருந்து நடத்துநராகப் பணியாற்றியவர். அருணை பொறியியல் மற்றும் கலைக் கல்லூரி, கம்பன் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளின் அதிபராகவும் உள்ளார். படம்: ஊடகம் -

கள்­ளக்­கு­றிச்சி: இரு வழித்தடங்­களில் பேருந்து சேவை­யைத் தொடங்கிவைத்து, அந்­தப் பேருந்தை­ சற்று தொலைவு வரை ஓட்டி அங்கு கூடி­யி­ருந்த மக்­க­ளை­யும் தொண்­டர்­க­ளை­யும் வியக்க வைத்­தார் பொதுப்­ப­ணித்­துறை, நெடுஞ்­சா­லைத் துறை அமைச்­ச­ரான எ.வ.வேலு.

கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டம், மண­லூர்­பேட்டை வழித்­த­டத்­தில் கடந்த 50 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக போக்கு­வ­ரத்து சேவை இல்­லா­மல் மக்­கள் பரிதவித்து வந்­த­னர்.

திரு­வண்­ணா­மலையில் இருந்து மண­லூர்­பேட்டை வழி­யாக திருச்­சிக்­கும் கள்­ளக்­குறிச்­சிக்­கும் இரு வழித்தடங்­களில் பேருந்­து­க­ளைத் துவக்­க­வேண்­டும் என்­பது மண­லூர்­பேட்டை மக்­க­ளின் நெடுநாள் கோரிக்­கை­யாக இருந்துவந்­தது.

இந்­நி­லை­யில், இரு புதிய வழித்­த­டங்­க­ளி­ல் பேருந்­து­களை கொடி­ய­சைத்து துவக்கி வைத்த அமைச்­சர் எ.வ.வேலு, பேருந்­தில் ஏறி சிறிது தூரத்­திற்கு அதை ஓட்­டி­யும் பார்த்­தார். இதைக்­ கண்டு அங்­கி­ருந்த மக்­கள் உற்­சா­கம் அடைந்­த­னர்.

"கிரா­மங்­களை எல்­லாம் நக­ரங்­க­ளாக மாற்­ற­வேண்­டும் என்­பதே தமி­ழக முதல்வரின் கனவு," எனவும் அமைச்சர் தெரி­வித்­தார்.

முத­லில் அதி­மு­க­வில் தனது அர­சி­யல் பய­ணத்தைத் தொடங்­கிய எ.வ.வேலு, பின்­னர் திமு­க­வில் தன்னை இணைத்­துக்கொண்­டார்.

"எல்­லா­ரும் ஏவி­னால்­தான் வேலை பார்ப்­பார்­கள். ஆனால், யாரும் ஏவா­ம­லேயே எனக்­காக வேலை பார்ப்­ப­தால்­தான் எ.வ.வேலு என்ற பொருத்­த­மான பெய­ரு­டன் இருக்­கி­றார்," என்று கரு­ணா­நி­தி­யால் பாராட்­டப்­பட்­ட­வர் ஆவார்.