கழிவறையில் சிசு சடலம்: தாய் கைது

தஞ்­சா­வூர்: தஞ்சை அரசு மருத்­து­வக் கல்­லூரி கழி­வறையில் பெண் சிசு­வின் சட­லம் ஒன்று இரு நாட்­க­ளுக்கு முன்பு கண்­டெ­டுக்­கப்­பட்டது. இந்த சம்பவம் தொடர்­பில், அந்­தக் குழந்தையைப் பெற்று, கொன்று­போட்ட தாயைக் காவல்­து­றை­யி­னர் கைது செய்தனர்.

தஞ்­சா­வூர் மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யின் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் உள்ள மேற்கத்திய கழி­வ­றை­யில் இம்­மா­தம் 4ஆம் தேதியன்று சரி­யாக தண்­ணீர் வர­வில்லை.

இதையடுத்து சுத்­தம் செய்­யச் சென்ற தூய்­மைப் பணி­யா­ளர்­கள் தண்­ணீர் வரா­ததால் கழி­வறைத் தொட்டியுடன் இணைப்­பில் உள்ள தண்­ணீர்த் தொட்­டி­யைத் திறந்து பார்த்­த­னர். அதில், பிறந்து சில மணி நேரமே ஆன சிசு தொப்­புள் கொடி­யு­டன் இறந்து கிடந்­தது.

தீவிர சிகிச்சைப் பிரி­வில் உள்ள கண்­கா­ணிப்­புக் கேம­ராக்­களில் பதி­வான காட்­சி­க­ளை­யும் காவல் நிலை­யத்­தி­னர் ஆய்வு செய்­த­னர்.

இதைத் தொடர்ந்து, வல்­லம் அருகே உள்ள ஆலக்­குடியைச் சேர்ந்த பன்­னீர்­செல்­வம் மகள் பிரி­ய­தர்­ஷி­னியை, 23, நேற்­று ­காலை கைது செய்­த­னர்.

விசாரணை­யில், திருப்­பூ­ரி­லுள்ள பின்னலாடை நிறு­வ­னத்­தில் வேலை பார்த்து வந்­த­போது ஒரு­வரை காத­லித்து கர்ப்­ப­மா­கி உள்ளார். காத­லன் திரு­ம­ணம் செய்துகொள்ள மறுத்­து­விட்­ட­தால், வேறு யாருக்­கும் தெரி­யா­மல் கழிவறைக்குச் சென்று தானே பிர­ச­வித்து, அக்­கு­ழந்­தை­யைக் கழி­வறைத் தொட்­டிக்குள் அமுக்கி கொலை செய்­ததும் தெரி­ய­வந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!