ஜோதிமணி எம்.பி.க்கு கண்டனம்

ஜோதிமணி எம்.பி.க்கு கண்டனம்

1 mins read
bab80b7a-7ddb-41d0-87dd-b06cfcf25a59
-

சென்னை: நேற்று முன்தினம் மறைந்த ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், காங்கிரசை சேர்ந்த ஜோதிமணி எம்பி, "ஆண்களின் உலகம் என்று நம்பப்படுகிற அரசியலில் தனி ஒரு பெண்ணாக நின்று போராடி வெற்றி பெற்றவர். இது அவரது தனிப்பட்ட போராட்டம் மட்டுமல்ல. பெண் என்றாலே எளிதாக நசுக்கிவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக வாழ்ந்த ஒரு பெண்ணின் கதை. அவருக்கு எனது அன்பும் அஞ்சலியும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுகவில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் சூழலில், காங்கிரசை மதிக்காத ஜெய லலிதாவுக்கு அஞ்சலி தெரி வித்தது ஏன் என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.