சொகுசு கப்பலில் வேலை; 43 பேரை ஏமாற்றிய இருவர் கைது

2 mins read
4ace71f8-6bef-4387-aa52-d29a7ef56a22
43 பேரிடம் 49 லட்சம் ரூபாயை வேலைவாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட ராஜா, திவ்யபாரதி. படங்கள்: தமிழக ஊடகம் -

நுங்­கம்­பாக்­கம்: வெளி­நாட்டு சொகுசு கப்­ப­லில் படிப்­புக்­கேற்ற, தகு­திக்­கேற்ற வேலை வாங்­கித் தரு­வ­தா­கக் கூறி 43 பேரி­டம் பல லட்­சங்­களில் மோசடி செய்த ஒரு பெண் உள்­பட இரு­வரை ஆயி­ரம் விளக்கு காவல்­துறை அதி­கா­ரி­கள் கைது செய்­துள்­ள­னர்.

சென்னை பள்­ளிக்­க­ரணை பகு­தி­யைச் சேர்ந்­த­வ­ரான வினோத், 35, ஃபேஸ்புக் பக்­கத்­தில் வெளி­நாட்டு சொகுசு கப்­ப­லில் தகு­திக்­கேற்ப வேலை வாங்­கித் தரப்­படும் என்ற விளம்­ப­ரம் பார்த்­துள்­ளார்.

இதைத்­தொ­டர்ந்து, நுங்­கம்­பாக்­கத்­தில் செயல்­பட்டு வந்த 'குட்­லீப் சொல்­யூ­ஷன் பிரை­வேட் லிமி­டெட்' என்ற நிறு­வ­னத்­திற்கு நேர்­மு­கத்­தேர்­வுக்­கா­கச் சென்­றுள்­ளார்.

வினோத்­தி­டம் அந்­நி­று­வ­னத்­தின் மேலாண்மை இயக்­கு­நர் ராஜா­வும் அவ­ரது உத­வி­யா­ளர் திவ்­ய­பா­ர­தி­யும் நேர்­கா­ணல் நடத்­தி­விட்டு, கப்­ப­லில் பணி­பு­ரி­வ­தற்கு ரூ. ஒரு லட்­சம் பணத்தை நிறு­வ­னத்­தின் வங்­கிக் கணக்­கில் செலுத்­தும்­படி கூறி­யுள்­ள­னர்.

வினோத்­தும் அவர்­கள் சொன்­னது போலவே கடந்த ஜன­வரி மாதம் நிறு­வ­னத்­தின் கணக்­கில் ஒரு லட்­சம் செலுத்தி உள்­ளார்.

ஆனால், இது­வரை வேலை­யும் வாங்­கித் தர­வில்லை. பணத்­தை­யும் திருப்­பிக்­கொ­டுக்­க­வில்லை.

இத­னால், சந்­தே­க­ம­டைந்த வினோத், இது­கு­றித்து ஆயி­ரம் விளக்கு காவல்­நி­லை­யத்­தில் புகார் அளித்­தார்.

இதை­ய­டுத்து, குற்­றம் சாட்­டப் பட்ட இரு­வ­ரை­யும் காவல்­துறை அதி­கா­ரி­கள் நீண்ட நாளா­கத் தேடி வந்த நிலை­யில், பூந்­த­மல்­லி­யில் இருந்த ராஜா, 35, திவ்­ய­பா­ரதி, 27, ஆகிய இரு­வ­ரை­யும் நேற்று முன்­தி­னம் கைது செய்­த­னர்.

விசா­ர­ணை­யில், இரு­வ­ரும் சொகுசு கப்­ப­லில் வேலை வாங்­கித் தரு­வ­தா­கக் கூறி 43 பேரி­டம் ரூ.48 லட்­சத்து 80,000 பணத்தை மோசடி செய்­தது தெரியவந்­த­தாக காவல்துறை அதிகாரிகள் கூறினர். விசா­ரணை தொடர்­கிறது.