சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி பகுதியில் ேநற்று காலையில் இரு சக்கர வாகனத்தில் பள்ளி சென்றுகொண்டிருந்த 10 வயது மாணவி பிரியதர்ஷினி (படம்) மீது திமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்ததில் அவரது மூக்கில் காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 11ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு வருகை அளித்து, நலத் திட்ட உதவிகளை வழங்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்று வருகின்றன.

