விமான நிலைய பரிசோதனைக் கட்டணம் குறைந்தது

தொற்று அபாயமுள்ள நாடுகளில் இருந்து வந்த 7,473 பேரில் 9 பேருக்கு பாதிப்பு

சென்னை: சென்னை விமான நிலை­யத்­தில் கொவிட்-19 பரி­சோ­த­னைக் கட்­ட­ணம் மேலும் குறைக்­கப்­பட்­டுள்­ளது.

அங்கு துரித பிசி­ஆர் பரி­சோ­த­னைக்கு ரூ.3,400யும் ஆர்டி-பிசி­ஆர் பரி­சோ­த­னைக்கு ரூ.700யும் பய­ணி­க­ளி­ட­மி­ருந்து வசூ­லிக்­கப்­பட்டு வந்­தது. இந்­தக் கட்­ட­ணத்தை குறைக்­கு­மாறு பல்­வேறு தரப்­பி­னர் கோரிக்கை வைத்­த­னர்.

இந்­நி­லை­யில், துரித பரி­சோ­த­னைக் கட்­ட­ணம் ரூ3,400லிருந்து ரூ.2,900ஆகக் குறைக்­கப்­பட்­டுள்­ளது. ஆர்டி-பிசி­ஆர் பரி­சோ­த­னைக்கு 700 ரூபாய் வசூ­லிக்­கப்­பட்ட நிலை­யில், ரூ.100 குறைத்து ரூ.600 என கட்­ட­ணம் நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

இன்று முதல் இந்த நடை­முறை தமி­ழ­கத்­தில் உள்ள நான்கு அனைத்­து­லக விமான நிலை­யங்­களில் அமல்­ப­டுத்­தப்பட்­டுள்­ள­தாக தமி­ழக ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

ஓமிக்­ரான் கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க தமி­ழ­கத்­தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய விமான நிலை­யங்­களில் தென்­னாப்­பி­ரிக்கா, பிரிட்­டன், போஸ்ட்­வானா, கானா, தான்­சா­னியா, சிங்­கப்­பூர், ஹாங்­காங், நியூ­சி­லாந்து உட்­பட தொற்று அபா­யம் உள்ள 11 நாடு­களில் இருந்து வரு­ப­வர்­கள் அனை­வ­ருக்­கும் மற்ற நாடு­களில் இருந்து வரும் பய­ணி­களில் 2 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் கொவிட்-19 பரி­சோ­தனை செய்­யப்­ப­டு­கிறது.

டிசம்­பர் முத­லாம் தேதி­யில் இருந்து 7ஆம் தேதி வரை ஓமிக்­ரான் பாதிப்­புள்ள நாடு­களில் இருந்து வந்த 7,473 பேருக்கு கொரோனா பரி­சோ­தனை நடத்­தப்­பட்ட நிலை­யில், அவர்­களில் ஒன்­பது பேருக்கு மட்­டுமே கிருமி தொற்­றி­யது உறு­தி­யாகி உள்­ளது. அவர்­க­ளது மாதி­ரி­கள் அடுத்­த ­கட்ட பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தில், 'டெல்டா பிளஸ்' வகை பாதிப்பு இருப்­பது உறு­தி­யா­னது.

பிற நாடு­களில் இருந்து வந்த 26,527 பய­ணி­களில் 2 விழுக்­காடு பய­ணி­க­ளுக்கு கொரோனா பரி­சோ­தனை எடுக்­கப்­பட்­டுள்­ளது. அவர்­களில் இரண்டு பய­ணி­க­ளுக்கு மட்­டுமே தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. மேலும், ஓமிக்­ரான் பாதிப்பு இல்லை என்­ப­தும் தெரி­ய­வந்­துள்­ளது.

இதற்­கி­டையே தமி­ழ­கத்­தில் நேற்று முன்­தி­னம் புதி­தாக 700க்கும் அதி­க­மா­னோ­ருக்கு கிருமி தொற்­றி­யுள்­ள­தாக மாநில சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

மேலும் பத்து பேர் பலி­யா­கி­விட்­ட­னர். இத­னால் ஒட்­டு­மொத்த பலி எண்­ணிக்கை 36,549 ஆக கூடி­யுள்­ளது.

இதே­வே­ளை­யில், 29 மாவட்­டங்­களில் உயி­ரி­ழப்­பு­கள் ஏதும் பதி­வா­க­வில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!