நாகர்கோவில்: மது அருந்திவிட்டு தினமும் அடித்துத் துன்புறுத்தி, தகராறு செய்து வந்த தந்தையை அவரது மகளே கூலிப்படையை ஏவி கொலை செய்திருப்பது காவல் துறை அதிகாரிகளின் விசார ணையில் தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், செம்பொன்விளை பகுதியைச் சேர்ந்தவர் குமார் சங்கர், 52. ரீத்தா புரம் பேரூராட்சியின் திமுக கிளைச் செயலாளராக இருந்து வந்தார்.
இவருக்கு ரெத்னாவதி, 46, என்ற மனைவியும் தீபாவதி, 26, சோனியாவதி, 23, என்ற இரு மகள்களும் உள்ளனர்.
இம்மாதம் 6ஆம் தேதி இரவு குமார் சங்கரின் வீட்டுக்கு வந்த வாலிபர் ஒருவர் அவரிடம் அழகாகப் பேசி அவரை வீட்டுக்கு வெளியே அழைத்துச் சென்று திடீரென சரமாரியாகக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு ஓடிவிட்டார்.
இந்தக் கொலை குறித்து தனிப்படை போலிசார் விசாரணை நடத்திவந்த நிலையில், திடீர் திருப்பமாக இந்தக் கொைலயில் அவருடைய மகள் தீபாவதியும் 18 வயது மாணவரும் 21 வயது இளையரும் சிக்கி உள்ளனர்.
கல்லூரியில் எம்.எட். படித்து வந்த தீபாவதி, திக்கணங்கோட்டில் உள்ள தட்டச்சு நிறுவனத்தில் படிக்கச் சென்றபோது அங்கு அவருக்கு 18 வயது மாணவர் ஒரு வருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
அவரிடம், தன் தந்தை தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தங்களை அடித்துக் கொடுமைப்படுத்துவதாகக் கூறி கண்ணீர்விட்டு அழுதுள்ளார். இதையடுத்து, தந்தையைத் தீர்த்துக் கட்டும் எண்ணத்தை மாணவ ரிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
மாணவர் கூறிய யோசனைப்படி ஸ்ரீமுகுந்தன், 21, என்பவர் மூலம் தந்தையைக் கொலை செய்ய கூலியாக ரூ.60,000 பேசி கொலை திட்டத்தை அரங்கேற்றி உள்ளார் தீபாவதி. தீபாவதியுடன் 18 வயது மாணவரும் கைது செய்யப்பட்டார். உவரியில் தலைமறைவாக இருந்த ஸ்ரீமுகுந்தனும் கைதானார்.

