நீலகிரி: ஹெலிகாப்டர் விபத்தின்போ பிபின் ராவத்தை தான் உயிருடன் பார்த்ததாகவும் அவர் தன்னிடம் தண்ணீர் கேட்டதாகவும் சிவக் குமார் (படம்) என்பவர் கூறியுள்ளார்.
"நான் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் எனது சகோதரரைப் பார்ப்பதற்காக வந்தபோது, பெரிய சத்தத்துடன் ஹெலி காப்டர் ஒன்று இரண்டாகப் பிளந்து தீப்பிடித்து விழுந்தது. ஹெலிகாப்டரில் இருந்து தூக்கி எறியப்பட்ட மூவரை நான் பார்த்தேன். அவர்கள் காயமடைந்து இருந்தனர்; ஆனால் உயிருடன் இருந்தனர்.
"காயமடைந்தவர்களில் ஒருவரை வெளியே மீட்டபோது அவர் தண்ணீர் கேட்டார். பின்னர் அவரை மீட்புக்குழுவினர் அழைத்துச் சென்றனர்.
"சிறிது நேரம் கழித்துதான் அவர் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் என்று ஒருவர் என்னிடம் கூறினார்.
"பிபின் ராவத் நாட்டுக்காக செய்துள்ள சேவைகளை என்னால் நம்பமுடியவில்லை. அவருக்கு என்னால் தண்ணீர் கூட கொடுக்கமுடியாத நிலையில் நான் இருந்ததால், என்னால் இரவு முழுவதும் தூங்கமுடியவில்லை," என்று கண்ணீர்மல்க சிவக்குமார் கூறியுள்ளார்.

