ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி: நீலகிரியில் 10,000 கடைகள் மூடல்

ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி: நீலகிரியில் 10,000 கடைகள் மூடல்

1 mins read
0934011c-7eb2-4e8b-b63b-e61bc35ea772
விபத்தில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 10,000க்கும் மேலான கடைகள் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. இதனால், மக்களின் நடமாட்டம் இன்றி தெருக்களும் சாலைகளும் வெறிச்சோடிக் கிடந்தன. படம்: ஏஎஃப்பி -

நீல­கிரி: குன்­னூர் அருகே ராணுவ ஹெலி­காப்­டர் விபத்­தில் முப்­ப­டைத் தலை­மைத் தள­பதி பிபின் ராவத் உள்­பட 13 ராணுவ வீரர்­கள் கடந்த 8ஆம் தேதி உயி­ரி­ழந்­த­னர். அவர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தும் வகை­யில் நீல­கிரி மாவட்­டத்­தில் உள்ள அனைத்­துக் கடை­களும் நேற்று மூடப்­பட்­டி­ருந்­தன.

இம்­மா­வட்­டத்­தின் புதிய ஆட்­சி­ய­ராக நிய­மிக்­கப்­பட்டு உள்ள எஸ்.பி. அம்­ரித்­தின் உத்­த­ர­வுப்­படி குன்­னூர், உதகை, கூட­லூர் உள்­ளிட்ட பகு­தி­களில் செயல்­படும் 10,000க்கும் மேலான கடை­கள், உண­வ­கங்­கள் உள்­ளிட்ட அனைத்து கடை­களும் காலை 6 முதல் மாலை 6 மணி வரை அடைக்­கப்­பட்டன.

மருந்­த­கங்­கள், பால் உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சிய கடை­கள் மட்­டும் வழக்­கம்­போல இயங்­கின.

இதே­போல சுற்­றுலா வாக­னங்­கள், ஆட்­டோக்­களும் இயக்­கப்­ப­ட­வில்லை. இத­னால், நீல­கிரி மாவட்­டத்­தில் உள்ள சுற்­று­லாத் தலங்­கள் வெறிச்­சோ­டிக் காணப்­பட்­டன.

ராணுவ அதி­கா­ரி­க­ளின் உயி­ரி­ழப்­புக்கு துக்­கத்­தைக் கடைப்­பிடிக்­கும் வகை­யில் மாவட்­டத்தில் உள்ள உண­வ­கங்­கள், வணிக நிறு­வ­னங்­கள், பேக்­கரி, மளிகை, காய்­க­றிக் கடை­கள் உட்­பட அனைத்து வர்த்­தக நிறு­வ­னங்­களும் அடைக்­கப்­பட்­ட­தாக வர்த்­தக, உண­வக சங்­கங்­க­ளின் தலை­வ­ரு­மான முக­மது ஜாபர் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, விபத்­தில் 80% தீக்காயங்­க­ளு­டன் மீட்­கப்­பட்ட விமானி வருண் ­சிங், பெங்­க­ளூரு­வில் உள்ள ராணுவ மருத்­து­வ­மனை­யில் சிகிச்சை பெற்று வரு­கி­றார். அவர் இன்­னும் ஆபத்­தான கட்­டத்­தி­லேயே இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இந்த மருத்­து­வ­ம­னை­யில் அதி­ந­வீன வச­தி­கள் உள்­ள­தால் அவ­ரைக் காப்­பாற்ற மருத்­து­வர்­கள் அனைத்து முயற்­சி­க­ளை­யும் எடுத்து வரு­கின்­ற­னர்.