கலை நிகழ்ச்சிக்குத் தடை; 13 வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஓமிக்ரான் பாதிப்பில்லை தடுப்பூசி போட்ட மாணவர்களுக்கு மட்டுமே கல்லூரிகளில் அனுமதி

ெசன்னை: தமி­ழ­கத்­தில் உள்ள அனைத்­துக் கல்­லூ­ரி­க­ளி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட மாண­வர்­க­ளுக்கு மட்­டுமே இனி அனு­மதி வழங்­கப்­படும் என்று மருத்­து­வம், மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் நேற்று அறி­வித்­தார்.

அண்ணா பல்­க­லைக்­க­ழக விடுதி­யில் தங்­கி­யி­ருந்த ஒன்­பது மாண வர்­க­ளுக்கு கொவிட்-19 கிரு­மித் தொற்று உறு­தி­யா­னதை அடுத்து, சுகா­தா­ரத் துறை, கல்­வித் துறை அதி­கா­ரி­க­ளு­டன் நேற்று அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் அவ­சர ஆலோ­சனை நடத்­தி­னார்.

இதைத்­தொ­டர்ந்து செய்­தி­யா­ளர் களி­டம் அவர் பேசி­ய­போது, "தொற்று உறு­தி­யான மாண­வர்­கள் ஒன்­பது பேரும் கிண்­டி­யில் உள்ள மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

"தமி­ழ­கத்­தில் உள்ள அனைத்து கல்­லூ­ரி­கள், பள்­ளி­க­ளி­லும் கலை நிகழ்ச்­சி­களை நடத்­து­வ­தற்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

"கல்­லூரி விடு­தி­களில் மாண­வர்­கள் கூட்­ட­மாக அமர்ந்து சாப்­பி­டா­மல் தகுந்த சமூக இடை­வெளி­யு­டன் உணவு உண்ண அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

"அத்­து­டன், 18 வய­துக்கு மேலான அனைத்து கல்­லூரி மாண­வர்­களும் தடுப்­பூசி போட்­டுக் கொள்­வது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது," என்று கூறி­னார்.

ஓமிக்­ரான் பாதிப்­பில்லை

தொற்று ஏற்­பட அதிக ஆபத்­துள்ள 13 நாடு­களில் இருந்து வந்த 11 பேருக்­கும் தொற்று பாதிப்பு குறைந்த நாடு­களில் இருந்து வந்த இரு­வ­ருக்­கும் தொற்று உறுதி செய்­யப்­பட்டு சிகிச்சை பெற்று வரு கின்­ற­னர். 13 பேருக்­கும் எடுக்­கப்­பட்ட பரி­சோ­தனை முடி­வு­களில் ஒரு­வர் பாதிப்­பில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்­பி­னார். மற்ற 12 பேருக்­கும் ஓமிக்­ரான் பாதிப்பு இல்லை எனத் ெதரி­ய­வந்­துள்­ளது என்று கூறி­னார்.

698 பேருக்கு பரி­சோ­தனை

இதற்­கி­டையே, தமி­ழ­கத்­தில் கடந்த 24 மணி நேரத்­தில் 698 பேருக்­குத் தொற்று பாதிப்பு உறு­தி­யா­னது. நேற்று 746 பேர் குண­ம­டைந்து வீடு திரும்­பி­னர். மாநி­லம் முழு­வ­தும் 7,883 பேர் சிகிச்­சை­யில் உள்­ள­னர். 15 பேர் உயி­ரி­ழந்­த­னர் என்று சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.

763 மாண­வ­ருக்கு பரி­சோ­தனை

ஒன்­பது மாண­வர்­க­ளுக்கு தொற்று உறு­தி­யா­ன­தைத் தொடர்ந்து, அண்ணா பல்­க­லைக்­க­ழ­கத்­தில் 'ஏ.சி. டெக்' வளா­கத்­தில் உள்ள 763 மாண­வர்­க­ளுக்கு பரி­சோ­தனை செய்­யப்­பட்­டது. இதை அமைச்­சர் உள்­ளிட்ே­டார் நேரில் சென்று பார்­வை­யிட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!