தாய், மகளை எரித்துக் கொன்ற வழக்கில் இலங்கைத் தமிழர்கள் இருவர் கைது

தாய், மகளை எரித்துக் கொன்ற வழக்கில் இலங்கைத் தமிழர்கள் இருவர் கைது

2 mins read
b55568ce-cad9-4744-a937-5331395b81bb
-

ராம­நா­த­பு­ரம்: வீட்­டி­லி­ருந்த தாய், மகளை இரவு நேரத்­தில் எரித்­துக் கொன்ற வழக்­கின் தொடர்­பில், இலங்­கைத் தமி­ழர்­க­ளுக்­கான மறு­வாழ்வு முகா­மில் வசித்து வந்த இரு­வரை நேற்று கைது செய்­த­ காவல்­துறை அதி­காரி­கள், மேலும் ஒரு­வ­ரைத் தேடி வரு­கின்­ற­னர்.

ராம­நா­த­பு­ரம் மாவட்­டம், மண்­ட­பம் ரயில்வே குடி­யி­ருப்­பில் வசித்­த­வர் காளி­யம்­மாள், 58.

இவர், மண்­ட­பம் ரயில்வே மருத்­து­வ­ம­னை­யில் தூய்­மைப் பணி­யா­ள­ரா­கப் பணி­யாற்றி வந்­தார். கண­வர் இறந்துபோன நிலை­யில், தனது இளைய மகள் மணி­மேகலை­யு­டன், 33, காளி­யம்­மாள் வசித்து வந்­தார்.

இந்­நி­லை­யில், மது­ரை­யில் வசிக்­கும் மூத்த மகள் சண்­மு­கப்­பி­ரி­யாவை ஊருக்கு வரு­மாறு கடந்த திங்­களன்று கைபே­சி­யில் காளி­யம்­மாள் அழைத்­துள்­ளார்.

கடந்த செவ்­வாயன்று காலை மண்­ட­பத்­துக்கு வந்த சண்­மு­கப்­பி­ரியா, வீட்­டில் வெள்­ளை­யம்­மாளும் மணி­மே­க­லை­யும் எரித்­துக் கொல்­லப்­பட்­டி­ருப்­ப­தைக் கண்டு அதிர்ச்சி அடைந்­தார்.

இது­தொ­டர்­பாக மண்­ட­பம் காவல்­துறை அதி­கா­ரி­கள் விசா­ரித்து வந்­த­னர்.

இந்நிலையில், மண்­ட­பம் இலங் கைத் தமி­ழர்­கள் மறு­வாழ்வு முகா­மில் வசித்து வந்த சசி­கு­மார், 35, ராஜ்­கு­மார், 30, ஆகி­யோர் நேற்று கைது செய்­யப்பட்டனர்.

விசா­ர­ணை­யில், கடந்த 6ஆம் தேதி­யன்று இரவு அந்த வீட்­டின் பின்­பக்­கம் வழி­யாக புகுந்து தூங்­கிக்­கொண்­டி­ருந்த காளி­யம்­மாளை யும் அவ­ரது மகளையும் தாக்கிக் கொன்­றுள்­ள­னர். தொடர்ந்து அவர்களது கழுத்து, காதில் அணிந்­தி­ருந்த தங்­கச்­சங்­கிலி, கம்­மல், வளை­யல் உள்­ளிட்ட நகை­களைக் கொள்ளையடித்­துள்­ள­னர்.

வீட்­டின் பீரோ­வில் இருந்த பட்­டுச்­சேலை உள்­ளிட்ட துணிகளை­ தாய்-மகள் உடல்கள் மீது போர்த்தி தீவைத்து எரித்­துவிட்டு, அங்­கி­ருந்து தப்பி ஓடியுள்ளனர். இக் கொலையில் சம்பந்தப்பட்ட மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். ­