'மேம்பால விபத்துக்கு அனுபவமற்ற ஊழியர் அணியே காரணம்'

'மேம்பால விபத்துக்கு அனுபவமற்ற ஊழியர் அணியே காரணம்'

2 mins read
dc4555bd-dfb5-4ca8-a2d2-4252fa19eebc
-

மதுரை: மதுரை புது நத்­தம் சாலை­யில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த

மேம்­பால விபத்­துக்கு பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்ட ஹைட்­ரா­லிக் இயந்­தி­ரத்­தில் ஏற்­பட்ட பழுதே முக்­கிய கார­ணம் என தெரிய வந்­துள்­ளது.

அத்­து­டன், அனு­ப­வ­மில்­லாத ஊழி­யர்­க­ளைப் பணி­யில் அமர்த்தி யிருந்­த­தும் கார­ண­மென விசா ரணை அறிக்­கை­யில் குறிப்­பி­டப் பட்­டுள்­ளது.

கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி மது­ரை­யில் 7.5 கிலோ மீட்­டர் தொலை­வுக்கு அைமக்­கப்­பட்டு வந்த பறக்­கும் பாலத்­தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இந்த ­வி­பத்­தில் வட­மா­நி­லத் தொழி­லாளி ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். இன்­னும் சிலர் காய­ம­டைந்­த­னர்.

இந்த விபத்து ஏற்­பட்­ட­தற்­கான கார­ணத்தை மூவர் கொண்ட நிபு­ணர் குழு­வி­னர் விசா­ரணை செய்து வந்­த­னர்.

இந்­நி­லை­யில், கடந்த சில மாதங்­க­ளாக தீவிர விசா­ரணை நடத்தி வந்த இவர்­கள், நேற்று தங்­க­ளது விசா­ரணை அறிக்கை களைத் தேசிய நெடுஞ்­சா­லைத் துறை, மதுரை மாவட்ட ஆட்­சி­யர் ஆகி­யோ­ரி­டம் அளித்­த­னர்.

விபத்து ஏற்­பட்­ட­தற்­கான பல்­வேறு கார­ணங்­களையும் அவ்­வறிக்கையில் சுட்­டிக் காட்­டி இருந்தனர்.

மேம்­பால விபத்­திற்கு முக்­கிய கார­ண­மாக பணி­யின்போது பயன்­ப­டுத்­தப்­பட்ட ஹைட்­ரா­லிக் இயந்­தி­ரத்­தில் ஏற்­பட்ட தொழில்­நுட்­பக் கோளாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அத்­து­டன், மேம்­பா­லப் பணி­களில் பயிற்­சி­யும் அனு­ப­வ­மும் இல்­லாத ஊழி­யர்­கள் ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­தும் விபத்­துக்கு கார­ண மாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன.

சம்­ப­வத்­தன்று நடை­பெற்ற மேம்­பா­லப் பணி­யின்­போது தேசிய நெடுஞ்­சா­லைத் துறை­யி­ன­ரால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த கண்­கா­ணிப்­புக் குழு­வி­னர் இல்­லா­தது, கட்டு­மான முறை­யில் மாற்­றங்­க­ளைப் பின்­பற்­றா­மல் பழைய முறைப்­படி கட்­டு­மா­னம் நடந்­த­தும் விபத்­துக்கு கார­ண­மாக அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

விபத்து தொடர்­பாக ஆறு பொறி­யா­ளர்­கள் இடை­நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ள­னர். ஒப்­பந்­த­தா­ரர்­களி­டம் உரிய அப­ரா­தத்தை வசூ­லித்த பிறகு, கட்­டு­மா­னப் பணிகளில் மாற்­றம் செய்து ஒப்­பு­தல் பெற்ற பின்­னரே பணி­கள் தொடங்­கும் என்று கூறப்­பட்டுள்ளது.