ஜெ.தீபா: ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது சந்தேகம் உள்ளது

ஜெ.தீபா: ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது சந்தேகம் உள்ளது

2 mins read
8d65a0de-1529-475d-8811-63baf834fcd3
வேதா இல்லம் கிடைத்த மகிழ்ச்சியில் தனது கணவர் மாதவனுடன் கையசைக்கும் தீபா ஜெயக்குமார். படம்: ஊடகம் -

சென்னை: மறைந்த முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லிதா மர­ணம் தொடர்­பில் தமி­ழக அரசு உரிய விசா­ரணை நடத்தி, அதில் உள்ள மர்ம முடிச்­சு­களை அவிழ்க்­க­வேண்­டும் என்று ஜெய­ல­லி­தா­வின் அண் ணன் மகள் ஜெ. தீபா வலி­யு­றுத்தி உள்­ளார்.

"ஜெய­ல­லிதா மர­ணம் தொடர்­பாக சசி­கலா மேல் சந்­தே­கம் உள்­ள­தால் அவ­ரை­யும் விசா­ரிக்க வேண்­டும்," எனக் கூறி­யுள்ள தீபா, விசா­ர­ணையை விரை­வில் நடத்தி முடிக்­க­வேண்­டும் என்­றும் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

சென்னை உயர்­ நீ­தி­மன்ற நீதி­பதி சேஷ­சா­யி­யின் உத்­த­ர­வின்­படி, சென்னை மாவட்ட ஆட்­சி­யர் விஜ­ய ராணி, போயஸ் கார்­ட­னில் உள்ள வேதா இல்­லத்­தின் சாவியை ஜெய­லலி­தா­வின் வாரி­சு­தா­ரர்­க­ளான ஜெ.தீபா, ஜெ.தீபக்­கி­டம் நேற்று முன்­தி­னம் ஒப்­ப­டைத்­தார்.

இதைத்­தொ­டர்ந்து, வேதா இல்­லத்­திற்கு வருகை தந்த இரு­வ­ரும் கோட்­டாட்­சி­யர், வட்­டாட்­சி­யர் முன்­னி­லை­யில் வீட்­டிற்­குள் சென்று அனைத்து அறை­க­ளை­யும் மூன்று மணி நேர­மா­கப் பார்­வை­யிட்­ட­னர்.

அத­னைத்­ தொ­டர்ந்து தீபா செய்தி­யா­ளர்­களிடம் பேசியபோது, "ஜெய­ல­லிதா இறந்த அன்று வீட்­டிற்­குள் என்­னால் செல்ல முடி­ய­வில்லை. வாச­லில்­தான் நின்­றேன். முன்­பை­வி­ட­வும் வேதா நிலை­யம் தற்­போது மிக­வும் மாறியுள்ளது.

"ஜெய­ல­லிதா பயன்­ப­டுத்­திய பெரும்­பா­லான பொருட்­க­ளைக் காண­வில்லை. அவ­ரது அடை­யா­ளங்­கள் வீட்­டிற்­குள் எது­வும் இல்லை. அவர் பயன்­ப­டுத்­திய கட்­டில்­கூட தற்­போது இல்லை," என்று சொன்­ன­வர், "ஜெய­ல­லி­தா­வின் மர­ணம் தொடர்­பாக சசி­கலா மேல் நிறைய சந்­தே­கம் உள்­ளது. அவ­ரை­யும் விசா­ரிப்­பது முக்கியம்," என்றார்.

சசிகலா இந்த வீட்டை உங்களி டமிருந்து வாங்கிவிடுவார் என்ற பேச்சு உள்ளதே என்று செய்தி யாளர்கள் கேட்டபோது, "இது என்ன கத்திரிக்காய் வியாபாரமா? யாருக்கு விற்றாலும் பதிவு செய்ய வேண்டும் அல்லவா, அப்போது எல்லாருக்கும் தெரியவருமே," என்று கேட்டவர், "வேதா இல்லத்தில் குடி­பெ­யர வேண்­டும் என்­ப­து­தான் எங்­க­ளது ஆசை. அது நிறைவேறி விட்டது. இந்த இல்லத்துக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்கவேண்டும்," என்றார்.

"ஜெய­ல­லி­தா­வி­டம் நெருங்க விடா­மல் எங்­க­ளைத் தடுத்­த­வர் சசி­கலா. ஆனால், இந்­தச் சொத்து தொடர்­பாக சசி­க­லா­வி­டம் இருந்து எந்­தத் தொந்­த­ர­வும் வர­வில்லை," என்றவர், "அதி­முக சார்­பில் வேதா நிலை­யம் தொடர்­பாக மேல்­மு­றை­யீடு செய்­தால் சட்­ட­ரீ­தி­யாக அதை சந்­திக்­க­வும் தயா­ராக உள்­ளோம்," என்று கூறி­யுள்­ளார்.

என் வாழ்வில் இப்படியொரு திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை. வேதா இல்லத்தில் வசிக்க முடிவு செய்துள்ளோம். என் அத்தை ஜெயலலிதாவின் ஆன்மா இப்போதுதான் சாந்தியடையும்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா