ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலில் விற்கப்படும் கங்கை தீர்த்தத்தை பணம் கொடுத்து வாங்கி சுவாமிக்கு அபிஷேகம் செய்து தரிசித்து வந்தனர்.
ஆனால், கொரோனா ஊரடங்குக்குப் பிறகு கங்கை தீர்த்தம் பெறுவதில் கோயில் நிர்வாகம் அதிக அக்கறை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், பக்தர்களின் இந்தக் கவலையைப் போக்கும் வகையில், நேற்று முதல் ராமேஸ்வரம் சன்னதி தெருவில் உள்ள பஜ்ரங்கதாஸ் பாபா சேவா அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு தலா 200 மில்லி கொண்ட கங்கை தீர்த்தம் பாட்டில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இது தினமும் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

