சென்னை: பாஜகவுக்கு தேர்தல் நிதியாக 100 கோடி ரூபாயை கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் என்பவர் வழங்கி உள்ளார்.
தேசிய, மாநில கட்சி களுக்கு 19 பெரு நிறுவனங் களிடம் இருந்து கடந்த 2020-21ஆம் நிதியாண்டில் தேர்தல் நிதியாக 245.72 கோடி ரூபாய் அதிகாரபூர்வமாக பெறப்பட்டுள்ளது. அதில், ரூ.209 கோடி பாஜகவுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இவற்றில் அதிகபட்ச தேர்தல் நிதியாக 100 கோடி ரூபாயை, கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் வழங்கி உள்ளார்.

