திருப்பூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், இன்ஸ்டகிராமில் பெண்போல பேசி பல பெண்களை ஏமாற்றி மிரட்டியிருக்கிறார்.
திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், அந்தச் சந்தேக நபரின் வலையில் வீழ்ந்து திருப்பூர் மாநகர 'சைபர் கிரைம்' காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபரைத் தேடியதாக மாலை மலர் வெளியிட்ட தகவல் தெரிவித்தது.
கல்லூரி மாணவிகளுக்கு இன்ஸ்டகிராம் மூலம் பாலியல் தொந்தரவு செய்தது கோவை மாவட்டம், குனியமுத்தூர் மேட்டுக்காடு பகுதியை சேர்ந்த 23 வயது நியாஸ் என்பது தெரிய வந்தது.
அவரை காவல்துறையினர் கைது செய்தனர். 10ஆம் வகுப்பு வரை படித்துள்ள அவர், மின்சாரப் பழுதுபார்ப்பாளராக வேலை செய்து வந்தார்.
நியாசிடம் இருந்து கைபேசியை பறிமுதல் செய்து காவல்துறை ஆராய்ந்து வருகிறது.
அதில் பல்வேறு இளம்பெண்களின் அரை நிர்வாண, முழுநிர்வாணப் படங்கள் மற்றும் காணொளிகள் பதிவுசெய்து இருந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக நியாசிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், இன்ஸ்டகிராமில் போலியாக பெண்களின் படங்களைப் பதிவிட்டு பல பெயர்களை உருவாக்கி கல்லூரி மாணவிகள், இளம் பெண்களைத் தொடர்புகொண்டு பெண் குரலில் நியாஸ் பேசியது தெரியவந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பெண்கள் அனுப்பும் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி இணையத்தத்தில் வெளியிடுவேன் என்றும் அவர் மிரட்டியதாக தெரிகிறது.
இதற்குப் பயந்து மாணவிகள், இளம்பெண்கள் பலர் நியாஸ் முன்பு காணொளி அழைப்பில் நிர்வாணமாக தோன்றியுள்ளனர். அதையும் அவர் பதிவுசெய்து தொடர்ந்து அந்தப் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதேப்போல் திருப்பூர் மாணவியை மிரட்டவே அவர் போலிசிடம் புகார் செய்தார். இளம்பெண்கள், மாணவிகள் உட்பட பலர் அவரிடம் ஏமாந்திருக்கலாம் எனத் தெரிகிறது. காவல்துறையினர் விசாரணை தொடர்கிறது.


