சென்னை: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற பெயரில் சசிகலா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நரிக்குறவர் சோமி குடும்பத்தினரை அரசு பேருந்தில் இருந்து ஈவு, இரக்கமின்றி இறக்கிவிட்டது கண்டனத்திற்கு உரியது. மேலும், இவர் ஒரு மாற்றுத் திறனாளியாகவும் இருக் கிறார். நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர் என்பதற்காக பேருந்தில் இருந்து இறக்கி விடலாமா? இது ஒரு மனித உரிமை மீறல் செயல் ஆகும்.இதேபோன்று கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு செல்வமேரி என்ற மீனவ பெண் ஒருவர் குளச்சல் பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் பேருந்தில் மாணவிக்குப் பேருந்து நடத்துநரே பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துமீறல்; சசிகலா கோரிக்கை
1 mins read
-

