பெண்போல பேசி கல்லூரி மாணவிகளை வலையில் விழவைத்த வாலிபர் கைது

பெண்போல பேசி கல்லூரி மாணவிகளை வலையில் விழவைத்த வாலிபர் கைது

2 mins read
eaa1a908-7a04-448f-a49a-60ebc494f874
-

திருப்­பூர்: திருப்­பூ­ரைச் சேர்ந்த வாலி­பர் ஒரு­வர், இன்ஸ்­ட­கி­ரா­மில் பெண் போல பழகி பல பெண்­களை ஏமாற்றி மிரட்­டி­யி­ருக்­கி­றார்.

திருப்­பூ­ரைச் சேர்ந்த கல்­லூரி மாணவி ஒரு­வர் அவ­ரது வலை­யில் வீழ்ந்து திருப்­பூர் மாந­கர 'சைபர் கிரைம்' காவல் நிலை­யத்­தில் புகார் அளித்­தார்.

இதை­ய­டுத்து திருப்­பூர் மாந­கர காவல்­துறை ஆணை­யர் வனிதா உத்­த­ர­வின் பேரில் துணை ஆணை­யர் ரவி மேற்­பார்­வை­யில் ஆய்­வா­ளர் சொர்­ண­வள்ளி தலை­மை­யில் தனிப்­படை அமைக்­கப்­பட்டு சம்­பந்­தப்­பட்ட நபரைத் தேடி­ய­தாக மாலை மலர் வெளி­யிட்ட தக­வல் தெரி­வித்­தது.

இதில் கல்­லூரி மாண­விக்கு இன்ஸ்­டகி­ராம் மூல­மாக பாலி­யல் தொந்­த­ரவு செய்­தது கோவை மாவட்­டம் குனி­ய­முத்­தூர் மேட்­டுக்­காடு பகு­தியைச் சேர்ந்த 23 வயது நியாஸ் என்­பது தெரிய வந்­தது.

அவரை காவல்துறை கைது செய்­த­து. 10ஆம் வகுப்பு வரை படித்­துள்ள அவர் மின்­சாரப் பழு­து­பார்ப்­பா­ள­ராக வேலை செய்து வந்­தார். நியா­சி­டம் இருந்து கைபே­சியை பறி­மு­தல் செய்து காவல்­துறை ஆராய்ந்து வரு­கிறது.

அதில் பல்­வேறு இளம்­பெண் ­க­ளின் அரை நிர்­வாண, முழு­நிர்­வாணப் படங்­கள் மற்­றும் காணொ­ளி­கள் பதிவு செய்து இருந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்­பாக நியா­சி­டம் காவல்­துறை நடத்­தி­ய விசாரணை யில் இன்ஸ்­ட­கி­ரா­மில் போலி­யாக பெண்­க­ளின் படங்­களைப் பதி­விட்டு பல பெயர்­களை உரு­வாக்கி கல்­லூரி மாண­வி­கள், இளம் பெண்­களைத் தொடர்புகொண்டு பெண் குர­லில் பேசி­ய­தாக அவர் தெரி­வித்­துள்­ளார்.

பெண்­கள் அனுப்­பும் புகைப் ­படங்­களை ஆபா­ச­மாக மாற்றி இணை­யத்தில் வெளி­யி­டு­வேன் என்­றும் அவர் மிரட்டியதாக தெரி கிறது. இதற்குப் பயந்து மாண­வி­கள், இளம்­பெண்­கள் பலர் நியாஸ் முன்பு காணொளி அழைப்­பில் நிர்­வா­ண­மாகத் தோன்­றி­யுள்­ள­னர். அதையும் அவர் பதிவுசெய்து தொடர்ந்து அந்த பெண்­க­ளுக்கு பாலி­யல் தொந்­த­ரவு கொடுத்­துள்­ளார்.

இதே ­போல திருப்­பூர் மாண­வியை மிரட்­டவே அவர் போலி­சில் புகார் செய்­துள்­ளார். இளம்­பெண்­கள், மாண­வி­கள் உட்­பட பலர் அவ­ரி­டம் ஏமாந்­தி­ருக்­க­லாம் எனத் தெரி­கிறது. காவல்­து­றை­யி­னர் விசாரணை தொடர்கிறது.