கொரோனா கட்டுப்பாடுகள், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் ஆலோசனை ராதாகிருஷ்ணன்: ஓமிக்ரானை எதிர்கொள்ளத் தமிழகம் தயார்

கொரோனா கட்டுப்பாடுகள், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் ஆலோசனை ராதாகிருஷ்ணன்: ஓமிக்ரானை எதிர்கொள்ளத் தமிழகம் தயார்

2 mins read
97985f73-98e5-4e20-ba70-34132b3dd832
-

சென்னை: ஓமிக்­ரான் உரு­மா­றிய கொரோனா தொற்று இது­வரை தமி­ழ­கத்­திற்­குள் நுழை­ய­வில்லை. ஒரு­வேளை இனி நுழைந்துவிட்­டா­லும்­கூட அதை எதிர்­கொள்ளத் தமி­ழ­கம் தயார் நிலை­யில் உள்ளதாக முதல்­வர் மு.க.ஸ்டா­லி­னி­டம் சுகா­தா­ரத்­துறை முதன்­மைச் செய­லா­ளர் ராதா­கி­ருஷ்­ணன் நேற்று கூறினார்.

மாநி­லம் முழு­வ­தும் கிரு­மிப் பர­வல் நாளுக்கு நாள் குறைந்து வந்­தா­லும் கூட, அண்டை மாநி­லங்­களில் உரு­மா­றிய ஓமிக்ரான் கால் பதித்­துள்­ள­தால் தமி­ழக மக்­க­ளை­யும் இந்த அச்­சம் தொற்றியுள்­ளது.

இந்­நி­லை­யில், நாளை 15ஆம் தேதி­யு­டன் தமி­ழ­கத்­தில் ஊர­டங்கு உத்­த­ரவு நிறை­வ­டைய உள்­ளதை அடுத்து, இதுகுறித்து முதல்­வர் தலை­மைச் செய­ல­கத்­தில் நேற்று ஆலோ­சித்­தார்.

"கிறிஸ்­து­மஸ், ஆங்­கி­லப் புத்­தாண்டு உள்­ளிட்ட பண்­டி­கை­கள் அடுத்­த­டுத்து வர இருப்­ப­தால் இதற்கு தடை விதிக்­க­லாமா? அல்­லது தமி­ழ­கத்­தில் நடைமுறையில் உள்ள கட்­டுப்­பா­டு­களை அப்­ப­டியே நீட்­டிக்­க­லாமா? அல்­லது கூடு­தல் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­க­லாமா?" என்று கேட்­டார்.

இதற்கு விளக்கம் அளித்த ராதா­கி­ருஷ்­ணன், "கொரோனா கிருமி தமி­ழ­கத்­தில் நாளுக்கு நாள் குறைந்து வருகிறதே தவிர முற்­றாக ஒழிந்துவிட்டது என்று கூற மு­டி­யாது," என்­ற­வர், "ஓமிக்ரான் தொற்று குறித்து மக்கள் பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை. இத்தொற்று பக்­கத்து மாநி­லங்­களில் ­தொற்றிவிட்­ட­தால் தமி­ழ­கத்­திற்­குள் வந்­தா­லும் அதை எதிர்­கொள்ள அரசு மருத்­து­வ­ம­னை­களில் சிறப்பு வார்­டு­கள் அமைக்­கப்­பட்­டுள்­ள­ன," என்று சொன்னார்.

"சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய அனைத்து பன்­னாட்டு விமான நிலை­யங்­க­ளி­லும் கொரோனா பரி­சோ­த­னை­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ள­ன.

"கிறிஸ்­து­மஸ், ஆங்­கி­லப் புத்­தாண்டு வரு­வதை­யொட்டி மக்­கள் எங்கு சென்­றா­லும் முகக்­க­வ­சம் அணிவதை வழக்­க­மாக்­கிக்கொள்­ளும் வகை­யி­ல் அரசு விழிப்புணர்வுப் பிர­சா­ரத்­தைத் தீவி­ரப்­ப­டுத்த வேண்­டும்," என்­று கேட்­டுக்­கொண்­டார்.

இதே­போல் பேரி­டர் மேலாண்­மைத்­துறை அதி­கா­ரி­களும் தங்­க­ளது கருத்­து­களை முதல்வரிடம் எடுத்­துக் கூறி­னர்.

கூட்­டத்­தில் எடுக்­கப்­பட்ட முடி­வு­கள் குறித்து மக்­க­ளுக்கு அர­சின் சார்­பில் இன்று அறி­விப்பு வெளி­யி­டப்­படும் என்றும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

674 பேருக்குப் பாதிப்பு

இதற்கிடையே, கடந்த 24 மணி நேரத்­தில் வெளி­நாட்­டுப் பய­ணி­கள் உட்­பட 674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்­பட்­டுள்­ள­தாக சுகாதாரத்­துறை தெரி­வித்­துள்­ளது. 708 பேர் குணமடைந்த நிலையில், 13 பேர் உயிரிழந்துள்ளார்.