2,400 வீடுகளில் கறுப்புக்கொடி போராட்டம்

2,400 வீடுகளில் கறுப்புக்கொடி போராட்டம்

2 mins read
88ea2722-2e0a-4b2c-9066-203dc88bd288
கூடலூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகள்களுடன் வீட்டில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தினார். படம்: ஊடகம் -

நீல­கிரி: கூட­லூர் பகு­தி­யில் சுற்றி வரும் ஒற்றை காட்டு யானையைப் பிடித்து அடர்­வ­னத்­துக்­குள் விடும்படி 20க்கும் மேலான கிராமங்களில் வசித்துவரும் 2,400 குடும்பத்தினர் தங்­கள் வீடு­களில் கறுப்­புக் கொடி­க­ளைக் கட்டி நேற்று போராட்­டம் நடத்தினர்.

நீல­கிரி மாவட்­டம், கூட­லூர் அருகே உள்ள தேவர் சோலை பாரந்­தொரை, செலுக்­காட்டி, புளி­யம்­பாரை உள்­ளிட்ட பகு­தி­களில் கடந்த ஆறு மாதமாக தனி ஒரு காட்­டு­யானை அட்­ட­கா­சம் செய்து வரு­கிறது.

20க்கும் மேற்­பட்ட வீடு­க­ளைத் தாக்கி சேதப்­ப­டுத்தி உள்­ள இந்த யானை, வீடு­களில் உள்ள அரிசி உள்­ளிட்ட உண­வுப்­பொ­ருள்களைச் சாப்­பிட்­டு­விட்டு மீத­முள்ளவற்றைக் கொட்டி இறைத்­து­விட்­டுச் செல்­வ­தா­கவும் கூறப்­படுகிறது.

ஒரு சில நேரங்களில் யானை வருவது தெரியாமல் வீட்­டுக்­குள் இருந்தவர்களும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

இது, பக­லில் விளை­ப­யிர்­களைச் சேதப்­ப­டுத்­து­வ­து­டன் சாலை­க­ளி­லும் நடந்து செல்­கிறது. சில நேரங்­களில் வீடு­க­ளுக்கு அரு­கே­யும் வந்து நிற்­கிறது. இத­னால் பொது­மக்­கள் பெரும் அச்­சத்­தில் உறைந்­துள்­ள­னர்.

இந்த யானை கொடுத்துவரும் தொந்தரவைப் பொறுத்துக்கொள்ள முடியாத மக்கள், அதனை அடர்­வனத்­துக்­குள் விரட்­டி­விட வேண்­டும் அல்­லது யானைகள் முகா­முக்குப் பிடித்­துச் செல்லவேண்­டும் என்ற கோரிக்கையுடன் தங்களது வீடுகளில் கறுப்­புக்­கொடி ஏற்றி வனத்­துறையின­ருக்கு தங்களது எதிர்ப்பைத் ெதரிவித்துள்ளனர்.

இரண்டு கும்கி யானை­களை வர­வ­ழைத்து அந்த ஒற்றை யானை­யைப் பிடிக்­க­ வனத்துறையினர் முயன்று வரு­கின்­ற­னர்.

தங்களது கோரிக்­கை­க­ளை செவி­ம­டுக்­கா­மல் காலம் தாழ்த்தி வரு­வ­தாக வனத்­து­றை­யி­னர் மீது மக்­கள் குற்­றம்சாட்டி உள்­ள­னர்.

இதை­ய­டுத்து, இந்­தப் போராட்­டம் மூலம் மாநில அர­சின் கவ­னத்தை ஈர்க்க வீடு­க­ளி­லும் சாைல­யி­லும் கறுப்­புக்­கொடி ஏற்றியிருந்த னர். 50க்கும் மேற்­பட்ட வனத்­துறை பணி­யா­ளர்­கள் யானை­யைப் பிடிக்கும் பணி­யில் ஈடுபட்டு வருவ தாக புதிய தலைமுறை தொலைக் காட்சி செய்தி கூறியுள்ளது.