அயர்லாந்து பூங்காவை அலங்கரிக்கத் தயாராகும் வண்டு

அயர்லாந்து பூங்காவை அலங்கரிக்கத் தயாராகும் வண்டு

1 mins read
b3c19de5-0253-4828-9fe6-7f148dec464d
வண்டின் முதுகில் உலகில் வாழ்ந்து மறைந்த தத்துவஞானிகளின் பெயர்கள் பொறிக்கப்படுகின்றன. படம்: தமிழக ஊடகம் -

மாமல்­ல­புரம்: அயர்­லாந்து நாட்­டில் உள்ள இந்­திய சிற்­பக்­கலை பூங்­காவை அலங்­க­ரிப்­ப­தற்­காக 15 டன் எடைெகாண்ட ராட்­சத வண்டு ஒன்று மாமல்­ல­புரத்­தில் உள்ள ஒரு சிற்­பக் கலைக் கூடத்­தில் தயா­ராகி வரு­கிறது.

கருங்­கல்­லில் 10 அடி நீளம், 8 அடி உய­ரத்­தில் இந்த ராட்­சத வண்டு வடி­வ­மைக்­கப்­பட்டு வரு­கிறது.

எகிப்து நாட்­டின் சின்­ன­மாக திகழ்ந்து வரும் இந்த வண்டை, எகிப்­தி­யர்­கள் பல­ரும் ஒரு பதக்­கம்போல் தங்­க­ளது கழுத்­தில் அணிந்­தி­ருப்­பர்.

மாமல்­ல­பு­ரம் சிற்­பக் கலைக் கல்­லூ­ரி­யில் பட்­டம் பெற்ற சிற்­பக் கலை­ஞர் முரு­கன் தலை­மை­யில் 10க்கும் மேற்­பட்ட சிற்­பி­கள் கடந்த எட்டு மாதங்களாகத் தொடர்ந்து இந்த வண்டை செதுக்கி வரு­கின்­ற­னர்.

அயர்­லாந்து நாட்டு சிற்­பக் கலை ஆர்­வ­லர் விக்­டர்­வே­லால், 82, அந்த நாட்­டில் அமைக்­கப்­பட்­டுள்ள இந்­திய சிற்­பக் கலைப் பூங்­கா­வில் அந்­நாட்டு மக்­கள் கண்­டு­ ரசிக்கும் வகை­யில் இந்த ராட்­சத வண்டு காட்சி அளிக்க உள்­ளது.

99% பணி­கள் முடிக்­கப்­பட்ட இந்த ராட்­சத வண்டு இன்­னும் ஒரு சில நாட்­களில் சென்னை துறை­மு­கத்­தில் இருந்து கப்­பல் மூலம் அயர்­லாந்து நாட்­டுக்கு கொண்டு செல்­லப்­பட உள்­ள­தாக இதனை வடி­வ­மைத்த சிற்பி முரு கன் செய்தியாளர்களிடம் தெரி­வித்­துள்­ளார்.