பொள்ளாச்சி: பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்துக்கு 72 வயது மூதாட்டி ஒருவர் ைகயில் துப்பாக்கியுடன் வந்திருந்தார்.
அவர் துப்பாக்கியும் கையுமாக இப்படி வந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறை அதிகாரிகளிடம், கீழே கிடந்து எடுத்ததாகக் கூறி கைத்துப்பாக்கியை மூதாட்டி ஒப்படைத்தார்.
கோவை மாவட்டம், ஒட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி, 72. பொள்ளாச்சியில் வசிக்கும் பேத்தியைப் பார்ப்பதற்காக வந்த இவர், கோவை சாலையோரம் இரு கையுறைகளுடன் துப்பாக்கி கிடந்ததாகக் கூறி அவற்றை தனது பேரனுடன் வந்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் மூதாட்டியும் பேரனும் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்துள்ளனர்.
அதன்பிறகுதான் விஜயலட்சுமி யின் மகன் செல்வன் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளி என்பது காவல்துறை யினருக்குத் தெரியவந்தது. இந்த துப்பாக்கி செல்வன் வசம் இருந்தி ருக்கலாம் என சந்தேகப்படும் காவல்துறையினர் மூதாட்டியின் மகனைத் தேடிவருகின்றனர்.

