போதைப்ெபாருள்: ஒரே வாரம்; 3,307 பேர் கைது

தர்­ம­புரி: மாநி­லம் முழு­வ­தும் குட்கா, பாக்கு, மாவா உள்­ளிட்ட போதைப் பொருள்­களை விற்­ற­தாக கடந்த ஒரே வாரத்­தில் 3,307 போ் கைது செய்­யப்­பட்­டுள்­ளனா்.

"பள்­ளி­கள், கல்­லூ­ரி­க­ளுக்கு அருகே கஞ்சா உள்­ளிட்ட போதைப் பொருள்­கள் விற்­கப்­ப­டு­கின்­றன. இத­னால் மாண­வர்­க­ளின் எதிர்­கா­லம் சீர­ழி­கிறது. இதைத் தடுக்­க­வும் போதைப் பொருளை ஒழிக்­க­வும் நட­வ­டிக்கை எடுக்கவேண்­டும்," என்­பது பொது­மக்­க­ளின் நெடு­நாள் கோரிக்­கை­யாக இருந்து வந்தது.

இந்­நி­லை­யில், தமி­ழக காவல் துறை­யின் சட்­டம், ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்­தி­ர­பாபு வெளியிட்­டுள்ள அறிக்­கை­யில், "தமிழகத்­தில் கடந்த 6ஆம் தேதி முதல் கஞ்சா, குட்கா, லாட்­டரி விற்­பனையைத் தடுக்­கும் வகை­யில் காவல்­துறை யினர் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்றனர்.

"கடந்த ஒரு வாரத்­தில் கஞ்சா விற்­பனை செய்­த­தா­க­வும் கடத்­திய தாக­வும் 324 குற்­ற­வா­ளி­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனா். இவா்க­ளி­ட­மி­ருந்து ரூ.51.97 லட்­சம் மதிப்­புள்ள 520 கிலோ கஞ்சா, கடத்­த­லுக்கு பயன்­ப­டுத்­திய 19 வாக­னங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்டு உள்­ளன.

"போதைப் பாக்கு, குட்கா பொருட்­கள் கடத்­தி­ய­தாக 2,983 போ் கைது செய்­யப்­பட்­டுள்­ளனா். இவா்க­ளி­ட­மி­ருந்து ரூ1.64 கோடி மதிப்­புள்ள 15 டன் பாக்கு, குட்கா பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளன.

"அதி­க­பட்­ச­மாக தர்­ம­புரி மாவட்­டத்­தில் 3,818 கிலோ, சேலத்­தில் 1,909 கிலோ, தஞ்­சா­வூ­ரில் 1,790 கிலோ, நாமக்­கல்­லில் 1,597 கிலோ, ஈரோட்­டில் 1,255 கிலோ, திருப்­பத்­தூ­ரில் 1,045 கிலோ பாக்குகளும் குட்காவும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன. கடத்­த­லுக்குப் பயன்­ப­டுத்­திய 31 வாக­னங்­களும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளன,"

என்­று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!