சென்னை: பண்டிகை சமயத்தில் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பொதுமக்கள் ஒன்று திரள்வதால் கிருமிப் பரவல் அதிகரிக்கும் சூழல் உள்ளதால், வரும் ஆங்கிலப் புத்தாண்டு தருணத்தில் அனைத்துக் கடற்கரைகளிலும் மக்கள் ஒன்று கூட தமிழக அரசு தடை விதித்து உள்ளது.
அத்துடன், இனி சுழற்சி முறையில் ஒருநாள் விட்டு ஒருநாள் பாடம் நடத்தப்படாமல் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் ஒருவழியாகக் குறைந்து வரும் நிலையில், அண்டை மாநிலங்களில் அதிகரித்து வரும் உருமாறிய ஓமிக்ரான் அச்சம் மக்களைத் தொற்றி உள்ளது.
இந்நிலையில், கிருமிப் பரவல் அறவே இல்லாத மாநிலமாக தமிழ கம் விளங்கவும் ஓமிக்ரான் தொற்றைக் கருத்தில் கொண்டும் இன்று 15ஆம் ேததியுடன் முடிவடைய இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் இம்மாதம் 31ஆம் ேததி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், "அண்டை மாநிலங்களில் ஓமிக் ரான் பரவி வருவதால், எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிா்க்க வேண்டும்.
"முகக்கவசம் அணியாமல் சென்றால் நோயால் பீடிக்கப்படும் வாய்ப்பு அதிகமுள்ளது.
"எனவே, பொது இடங்களில் முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
"பொதுமக்கள் நலன் கருதி அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும்," என கேட்டுக்கொண்டுள்ளார்.
இயல்பு நிலையில் பள்ளி திறப்பு
பள்ளி, கல்லூரி மாணவா்களின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு ஜனவரி 3ஆம் தேதியில் இருந்து 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிகளும் அனைத்துக் கல்லூரிகள், தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனங்கள் ஆகியனவும் சுழற்சி முறையைக் கைவிட்டு இயல்பாகச் செயல்படும் என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசியல் கூட்டங்கள் ரத்து
சமுதாய, கலாசார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கான தடை தொடரும் எனவும் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
கடைகளில் பணிபுரிபவர்களும் வாடிக்கையாளர்களும் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினர் உறுதி செய்ய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் கடை களில் அதிகமான நபர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

