செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
81ab60c3-c4f4-4f99-b9bb-b757d534f995
சீர்காழியில் பிடிபட்ட ஆஸ்திரேலிய அரிய வகை ஆந்தை வனத்துறை யினரிடம் ஒப்படைக்கப் பட்டது.படம்:ஊடகம் -
multi-img1 of 2

அரிய வகை ஆந்தை ஒப்படைப்பு

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தின் வாசல் பகுதியில் அரிய வகை வெள்ளை நிற ஆஸ்திரேலிய ஆந்தை ஒன்று அமர்ந்து இருப்பதைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள், இதுகுறித்து சீர்காழி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் இந்த அரிய வகை ஆந்தையை மீட்டு சீர்காழி வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துவந்து அதைப் பாதுகாப்பாக பறக்கவிட்டனர்.

உலகெங்கும் 132 ரகங்களில் காணப்படும் இந்த ஆந்தைகள் சுற்றுச்சூழலை சமநிலையுடன் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது.

ரங்கநாதர் கோயிலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தரிசனம்

தமிழகம் வந்துள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் (பச்சை துண்டுடன்) ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் குடும்பத்துடன் நேற்று வைகுண்ட ஏகாதசி திருநாளில் சாமி தரிசனம் செய்தார். படம்: தமிழக ஊடகம்

திருச்சி: தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். விமான நியைத்தில் அவரை திருச்சி ஆட்சியர் சிவராசு வரவேற்றார். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு இரண்டாவது முறையாக வந்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய சந்திரசேகரராவ், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று மாலை சந்தித்துப் பேசவும் முடிவு செய்திருந்தார்.

ராமதாசுக்கு செல்லூர் ராஜு பதிலடி

மதுரை: சட்டமன்றத் தேர்தலில் பாமக வெற்றிபெறக்கூடாது என்பதற்காக, கூட்டணிக் கட்சிகள் தங்களது கூட்டணித் தர்மத்தை மீறியதாகவும் அதனாலேயே 20 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டிய பாமக 5 தொகுதிகளை மட்டுமே பெறமுடிந்தது என்றும் அண்மையில் பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாட்டி இருந்தார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "அதிமுக கூட்டணியில் பாமக இல்லாததால் அவர்களின் கருத்துக்கு பதில் கூற வேண்டியதில்லை," என பதிலடி கொடுத்துள்ளார்.

இதனால், திமுகவுடன் பாமக கூட்டணி அமைக்குமோ என்ற ஐயம் அரசியலில் எழுந்துள்ளது.

பாலியல் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை

சென்னை: பணியிடத்தில் பெண்கள் தெரிவிக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது உடனடி நடவடிக்கை தேவை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் புகார் விசாரணையை தாமதப்படுத்துவது கடமை தவறிய செயல் எனவும் நீதிபதி ஒரு வழக்கு விசாரணையின்போது தெரிவித்தார்.