புதுடெல்லி: பழங்காலத்து இலக்கண நூலான தொல்காப்பியத்தை 10 இந்திய மொழிகளிலும் 15 உலக மொழிகளிலும் மொழி பெயா்க்க செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து இந்நிறு வனத்தின் இயக்குநா் இரா.சந்திரசேகரன் கூறுகையில், "சங்க இலக்கியங்களில் தொன்மைவாய்ந்த நூலாக விளங்கும் தொல்காப்பியம் ஏற்கெனவே ஆங்கிலம், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது.
"இப்போது, சமஸ்கிருதம், பெங்காலி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 10 இந்திய மொழிகளிலும் பிரெஞ்சு, ஜொ்மன், அரபு, சீனம், கொரியன் உள்ளிட்ட 15 வெளிநாட்டு மொழிகளி லும் மொழிபெயா்க்கப்பட உள்ளது. சிறந்த மொழி பெயர்ப்புத் திறன் உள்ளவர் கள் கூடுதல் விவரங் களுக்கு இணையத்தளத்தை அணுகலாம்," என்றார்.

