ஜெயலலிதா இல்லம்; மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு அனுமதி

ஜெயலலிதா இல்லம்; மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு அனுமதி

1 mins read
afbe806b-fbda-4608-98ae-ed2b50aadcb2
-

சென்னை: தமி­ழ­கத்­தின் மறைந்த முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் போயஸ் தோட்ட இல்­ல­மான வேதா நிலை­யத்தை அவ­ரு­டைய வாரி­சு­க­ளாக தீபா, தீபக்­கி­டம் ஒப்­ப­டைக்க உயர் நீதி­மன்­றம் அண்­மை­யில் உத்­த­ர­விட்­டது.

இதை­ய­டுத்து ஜெய­ல­லிதா இல்­லத்­தின் சாவியை அர­சாங்க அதி கா­ரி­யி­ட­மி­ருந்து பெற்று இரு­வ­ரும் உள்ளே சென்­ற­னர்.

கடந்த அதி­முக அரசாங்கம், ஜெய­ல­லி­தா­வின் வீட்டை நினைவு இல்­ல­மாக மாற்­றப்­படும் என அறி­வித்து, அதைச் செயல்­ப­டுத்­தும் வித­மாக சட்­டம் இயற்றியது.

மேலும் வேதா நிலை­ய­மும் அங்­குள்ள அசை­யும் சொத்­து­களும் அர­சு­ட­மை­யாக்­கப்­பட்­டன.

இந்­தச் சட்­டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொடுத்த ஜெய­ல­லி­தா­வின் வாரி­சு­க­ளான தீபா, தீபக், ஜெயலலிதா வீட்டை அரசுடைமை யாக்கியது செல்லாது என்றும் வேதா நிலை­யத்­துக்கு 67 கோடியே 90 லட்­சம் ரூபாயை இழப்­பீ­டாக நிர்­ண­யித்து பிறப்­பிக்­கப்­பட்ட உத்­த­ர­வை­ ரத்து செய்ய வேண்­டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த வழக்­கில் தீபா, தீபக்குக்கு சாதமாக தீர்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் வேதா இல்­லம் குறித்து அதி­முக செயற்­குழு கூட்­டத்­தில் ஆலோ­சனை செய்து நீதி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீடு செய்யப் படும் என்று அதி­முக கூறி­யி­ருந்­தது.

இதன் அடிப்­ப­டை­யில் அதி­முக மற்­றும் வேதா நிலைய நினை­வில்ல அறக்­கட்­டளை சார்­பாக முன்­னாள் அமைச்­சர் சி.வி. சண்­மு­கம் தரப்­பில் மேல் முறை­யீடு செய்ய அனு­மதி கேட்டு மனு தாக்­கல் செய்­யப் ­பட்டது. இந்த வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்­த­போது, அதி­முக மேல்முறை­யீடு செய்ய உயர் நீதி­மன்­றம் அனு­மதி அளித்தது.