விவசாயிகளின் வெற்றி ஊர்வலம்

விவசாயிகளின் வெற்றி ஊர்வலம்

1 mins read
2cf16c10-feb1-446b-84ff-808537036861
-

சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை அரசாங்கம் மீட்டுக் கொண்டதால் கடந்த சில நாட்களாக விவசாயிகள் முகாம்களை அகற்றி சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று போராட்டம் முடிவுக்கு வந்ததாக விவசாயிகள் அதிகார பூர்வமாக அறிவித்தனர். இதையடுத்து டெல்லி- உத்தரப்பிரதேச எல்லையில் உள்ள போராட்ட களத்தி லிருந்து வெற்றி ஊர்வலம் புறப்பட்டது.

பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் டிகைட் (நடுவில் கையை தூக்கிக் கொண்டு இருப்பவர்) தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் விவசாயிகள் பாட்டுப் பாடி, நடனமாடி வெற்றியைக் கொண்டாடினர்.