69 இடங்களில் சோதனை

69 இடங்களில் சோதனை

2 mins read
7487422d-9be6-4a45-adbb-536d081c3a99
தங்கமணி அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக 4.85 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது என்று தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கோப்புப் படம்: தமிழக ஊடகம் -

முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி மீது ஊழல் வழக்குப்பதிவு

சென்னை: முன்­னாள் அதி­முக அமைச்­சர் தங்­க­மணி, அவ­ரது உற­வி­னர்­கள், நண்­பர்­கள் வீடு­களில் லஞ்ச ஒழிப்பு காவல்­துறை நேற்று முழு­வ­தும் சோதனை நடத்­தி­யது. இந்­தச் சோதனை இன்­றும் தொட­ர­லாம் என எதிர்­பார்க்­கப் படு­கிறது.

நேற்று நில­வ­ரப்­படி கோவை, நாமக்­கல், ஈரோடு, சேலம், சென்னை என 69 இடங்­களில் சோதனை நடை­பெற்­ற­தாக தமி­ழ­கத்­தி­லி­ருந்து வெளி­யா­கும் ஊடங்­கள் தெரி­வித்­தன.

ஆந்­திர மாநி­லம் சித்­தூர் மற்­றும் கர்­நா­ட­கா­வி­லும் லஞ்ச ஒழிப்பு காவல்­துறை விசா­ரணை நடத்­தி­ய­தா­க­வும் சென்­னை­யில் மட்­டும் 14 இடங்­களில் லஞ்ச ஒழிப்பு காவல்­துறை சோதனை மேற்­கொண்ட தாக­வும் தினத்­தந்தி நாளேடு குறிப்­பிட்­டது.

மேலும் நாமக்­கல் மாவட்­டம் கோவிந்­தம்­பா­ளை­யத்­தில் உள்ள தங்­க­மணி வீட்­டில் காலை 6:45 மணி முதல் 18 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல்­துறை சோதனை நடத்­தி­யது. இதற்­கி­டையே அங்கு குவிந்த 100க்கும் மேற்­பட்ட அதி­மு­க­வி­னர், திமுக மற்­றும் காவல் துறையைக் கண்­டித்து முழக்­க­மிட்­ட­னர்.

சேலம் நெடுஞ்­சாலை நகர் பகுதி யில் உள்ள தங்­க­ம­ணி­யின் மகன் தர­ணி­த­ரன் வீட்­டி­லும் லஞ்ச ஒழிப்பு காவல்­துறை சோதனை நடத்­தி­யது.

தங்­க­ம­ணிக்கு நெருக்­க­மா­ன­வர் என்று கூறப்­படும் அரசு ஒப்­பந்­த­தா­ர­ரான நாமக்­கல்­லில் இருக்­கும் சத்­தி­ய­மூர்த்தி வீட்­டி­லும் லஞ்ச ஒழிப்­புத்­துறை சோதனை நடத்­தி­ய­தாக ஊட­கங்­கள் கூறின.

ஈரோட்­டில் பாரி வீதி, பண்ணை நகர், பண்ணை வீதி, கண­பதி நகர், முனி­யப்­பன் கோவில் வீதி உள்­ளிட்ட ஐந்து இடங்­களில் 30க்கும் மேற்­பட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறை­யி­னர் சோத­னை­யில் ஈடு­பட்­ட­னர்.

கரூர் அருகே வேலா­யு­தம்­பா­ளை­யம் பகு­தி­யில் அதி­மு­க­வின் முன்­னாள் மின்­சா­ரத்­துறை அமைச்­ச­ரு­மான தங்­க­ம­ணி­யின் உற­வி­னர் வசந்தி வீட்­டில் லஞ்ச ஒழிப்பு காவல்­து­றை­யி­னர் சோத­னை­யிட்­ட­னர்.

சென்னை கிழக்கு கடற்­கரை சாலை பனை­யூ­ரில் சோதனை நடை­பெற்­ற­போது தங்­க­மணி வீட்­டின் முன்பு கூடிய அ.தி.மு.க. தொண்­டர்­கள் பாது­காப்­புக்­காக போடப்­பட்ட தடுப்­பு­களை அகற்ற வேண்­டும் என்று கோரி காவல்­து­றை­யி­ன­ரு­டன் வாக்கு வாதத்­தில் ஈடு­பட்­ட­னர்.

தங்­க­மணி, அவ­ரது மனைவி, மகன் மீது காவல்­துறை வழக்­குப் பதிவு செய்­துள்­ளது.

அதில், 2016-2020 அமைச்­ச­ராக இருந்­த­போது வரு­மா­னத்­திற்கு அதி­க­மாக 4.85 கோடி ரூபாய் சொத்து சேர்த்­த­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மேலும், முறை­கே­டாக சேர்த்த சொத்­து­களை கிரிப்­டோ­க­ரன்­சி­யில் முத­லீடு செய்­த­தாக முதல்­கட்ட தக­வல் அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.