சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெற்றுள்ள முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் வாங்க, 133 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.
இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், வாணிபக் கழக மேலாண் இயக்குநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தலா 50 கிராம் முந்திரி, திராட்சை மற்றும் 10 கிராம் ஏலக்காய் வாங்குவதற்கும் அவற்றை பொட்டலம் செய்வது உள்ளிட்ட செலவு களுக்கும் அதிகபட்சமாக 62 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான தொகையை, வாணிபக் கழக மண்டல மேலாளர்கள் பெற்று, கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர்களுக்கு காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்று அறிக்கை கூறியது.

