செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
0ed177ec-3c7c-46c1-9d81-4ec2f43095d4
-

நேரடியாக எதிர்க்க முடியாத

அரசு: எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "நேரடியாக எதிர்க்க திராணியில்லாத திமுக அரசு, லஞ்ச ஒழிப்பு போலிசாரை ஏவிவிட்டுள்ளது," என்று காட்டத்துடன் கூறியுள்ளார்.

ஓமலூரில் நேற்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, திட்டமிட்டு முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு, உறவினர் வீடுகளில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு சோதனை நடத்துகிறது திமுக அரசு. எங்கள் கழகத்தின் அமைப்பு தேர்தலானது, எழுச்சியோடு நடைபெற்று வரும் நிலையில் திமுக அரசு இந்தச் சோதனையை நடத்துகிறது. அவர்களால் அதிமுகவின் வளர்ச்சியை பொறுத்துகொள்ள முடியவில்லை," என்றார்.

அரசு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புறக்கலைகள்

சென்னை: அரசு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புறக் கலைகளை ஒரு பகுதியாக்க நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி தனியார் நிறுவன பண்பாட்டு நிகழ்ச்சிகளிலும் நாட்டுப்புறக் கலைகளைச் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களிலும் நாட்டுப்புறக் கலைகளை ஒரு பகுதியாக்கவும் தொழில் மற்றும் வணிக வரித்துறை ஆணையரகம், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.