தகவல் அளித்தால் ரூ.10,000 வெகுமதி

தகவல் அளித்தால் ரூ.10,000 வெகுமதி

1 mins read
955484f6-8d89-4c01-8965-f89a3054332a
-

திருவள்ளூர்: தமிழகத்தில் ேபாைதப்பொருட்கள் பயன்பாட்டைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில்,

திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா, போதைப் பாக்கு, மாவா உள்ளிட்ட பொருட்களை விற்பவர்கள் குறித்து தகவல் அளித்தால் ரூ.10,000 சன்மானம் வழங்கப்படும் என்று இம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளி யிடப்பட்டுள்ள அறிக்கையில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்கும் நோக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் புகார் அளிப்பவர்கள் விவரங்கள் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.