அடுத்த மாதம் சென்னையில் தமிழ் வம்சாவளியினர் மாநாடு

1 mins read
ddd62d80-f7e3-440d-850d-cd1a17e8acc7
-

சென்னை:சென்னை கலைவாணர் அரங்­கில் ஜன­வரி 8, 9, 10ல் உலக தமிழ் வம்­சா­வளி மாநாடு நடக்­க­வுள்­ள­தாக தினமலர் தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்­பாக பேசிய உலக தமிழ் வம்­சா­வளி அமைப்­பின் தலை­வர் செல்­வ­கு­மார், உலக நாடு­களில் வாழும் தமிழ் அமைப்பு­ க­ளின் சார்­பில் ஒவ்­வோர் ஆண்­டும் ஜன­வ­ரி­யில் உலக தமிழ் வம்­சா­வளி மாநாடு, பொங்­கல் விழா உள்­ளிட்­டவை நடத்­தப்­படும் என்­றார். இவ்­வாண்டு மாநாட்­டில் 200க்கும் மேற்­பட்ட நாதஸ்­வர கலை­ஞர்­கள் பங்­கேற்­கின்­ற­னர். பெண் தொழில் அதி­பர்­களை உரு­வாக்­கும் திட்­டம், தமிழ் காமன்­வெல்த் அமைப்பு ஆகி­யவை துவக்கப்­பட உள்­ளன. அதே­போல தமி­ழர்­க­ளின் கலை, கலா­சா­ரம், உணவு, விளை­யாட்டு போன்ற வற்றை பறைசாற்றும் நிகழ்ச்சி களும் நடை­பெறும். இதில், உலக தமிழ் எம்.பி.,க்கள் பங்­கேற்­பர் என்­றும் அவர் தெரிவித்தார்.