'இந்தியாவிலேயே ஜனநாயக முறைப்படி உள்கட்சித் தேர்தலை நடத்திய ஒரே கட்சி அதிமுக'

'இந்தியாவிலேயே ஜனநாயக முறைப்படி உள்கட்சித் தேர்தலை நடத்திய ஒரே கட்சி அதிமுக'

2 mins read
eb3629e6-a45f-45d0-b426-c8b0085d99f6
-

சேலம்: இந்­தி­யா­வி­லேயே ஜன­நாயக முறைப்­படி உள்­கட்­சித் தேர்­தலை நடத்­திய ஒரே கட்சி அதிமு­க­தான் என்று அதி­முக இணை ஒருங் ­கிணைப்­பா­ள­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான எடப்­பாடி பழ­னி­சாமி கூறி­யுள்­ளார்.

அதி­மு­க­வில் இரண்­டாம் கட்­ட­மாக 36 மாவட்­டங்­களில் இம்­மா­தம் 22, 23 தேதி­களில் உள்­கட்­சித் தேர்­தல் நடை­பெறஉள்­ளது. கோவை கழக மாவட்­டங்­களில் நடை­பெ­றும் தேர்­த­லுக்கு சேலம் மாவட்­டத்­தைச் சேர்ந்த நிர்­வா­கி­கள் நிய­மிக்­கப்­பட்டு உள்­ள­னர்.

இந்­தத் தேர்­த­லில் ஆணை­யாளர்­ க­ளாக செயல்­படும் தேர்­தல் பொறுப்­பா­ளர்­கள், தேர்­தல் ஆணை­யா­ளர் ­க­ளுக்­கான ஆலோ­ச­னைக் கூட்­டம் ஓம­லூ­ரில் உள்ள புற­ந­கர் மாவட்ட கழக அலு­வ­ல­கத்­தில் நடை­பெற்றது.

இந்த கூட்­டத்­தில் பங்­கேற்­றுப் பேசிய இணை ஒருங்­கி­ணைப்­பாளர் எடப்­பாடி பழ­னி­சாமி, ஜெய­ல­லிதா மறை­வுக்­குப் பிறகு நடை­பெறும் கழக அமைப்பு தேர்­தலை முதன்­மு­த­லில் நடத்தி முடித்­தது சேலம் புற­ந­கர் மாவட்ட கழ­கம்­தான். அதற்­காக பணி­யாற்­றிய நிர்­வா­கி­க­ளுக்கு நன்றி தெரி­வித்­துக் கொள்­கி­றேன். அதே­போல், திமு­கவைக் கண்­டித்து நடை­பெற்ற ஆர்­பாட்­டத்தை வெற்றி ­க­ர­மாக நடத்திக் கொடுத்­த­தற்­கும் நிர்­வா­கி­க­ளுக்கு நன்றி தெரி­ வித்துக்கொள்­கி­றேன்," என்றார்.

"ஆட்­சி­யில் இருந்­தா­லும் இல்லா­ விட்­டா­லும் மக்­க­ளுக்கு சேவை செய்­யும் ஒரே இயக்­கம் அதி­முக என்­பதை நிரூ­பித்துக்காட்டி­ உள்­ளோம். அடித்­தட்டு மக்­க­ளுக்­கா­க­வும்­ ஒ­டுக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கா­க­வும் தாழ்த்­தப்­பட்ட மக்­க­ளுக்­கா­க­வும்­தான் எம்­ஜி­ஆர் இந்த கட்­சியை உரு­வாக்­கி­னார்.

"அவ­ரது வழி­யில் பல்­வேறு சிர­மங்­க­ளுக்­கும் இடை­யில் தனது உயிர் இருக்­கும்­வரை அதி­மு­கவை வழி­ந­டத்­தி­ய­வர் ஜெய­ல­லிதா, தனக்குப் பின்­னும் அதி­முக 100 ஆண்­டு­கள் வாழும் என்று தெரி­வித்­த­வர் ஜெய­ல­லிதா.

"அதி­முக ஜன­நா­யகக் கட்சி. சாதி, மதத்­திற்கு அப்­பாற்­பட்ட கட்சி என்று தெரி­வித்த எடப்­பாடி பழ­னி­சாமி, இந்­திய அள­வில் எத்­த­னையோ கட்­சி­கள் இருந்­தா­லும் ஜன­நா­யக முறைப்­படி உள்­கட்­சித் தேர்­தலை நடத்­தி­யது அதி­மு­க­தான்," என்று எடப்­பாடி பழ­னி­சாமி மேலும் தெரி­வித்­தார்.