துப்பாக்கிச் சூடு நடத்தி கொள்ளை: நால்வருக்கு காயம்

துப்பாக்கிச் சூடு நடத்தி கொள்ளை: நால்வருக்கு காயம்

1 mins read
c0b69df7-cb01-4eff-bab6-3edf0397a777
கொள்ளையர்களால் காயம் அடைந்த புஷ்கரனுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. படம்: ஊடகம் -

அரக்­கோ­ணம்: அரக்­கோ­ணம் அருகே 'தீரன்' திரைப்­பட பாணி யில் வீட்­டுக்­குள் புகுந்து துப்­பாக்கி முனை­யில் பெண்­கள் அணிந்­தி­ருந்த நகை, பணத்தை ஒரு கும்பல் கொள்­ளை­ய­டித்­துச் சென்றது அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

துப்­பாக்­கிச் சூட்­டில் காய­ம­டைந்த நால்­வ­ரும் அரக்­கோ­ணம் அரசு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

ராணிப்­பேட்டை மாவட்­டம், செய்­யூர் கிரா­மத்­தில் நள்­ளி­ர­வில் வீட்­டின் கதவு தட்­டப்­படும் சத்­தம் கேட்டு எழுந்து வந்த கணக்­கா­ளர் புஷ்­க­ரன், 23, அவ­ரது தாய், பெரி­யம்மா, பாட்டி ஆகி­யோரை மூவர் நாட்டுத் துப்­பாக்­கி­யால் சுட்டும் வீச்சரிவாளால் தாக்கியும் 25 சவ­ரன் நகை, ரூ.60,000 ரொக்­கத்தைக் கொள்­ளை­ய­டித்­துச் சென்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கொள்­ளை­ய­டித்­த­வர்­கள் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பேசியதாகக் கூறப்படுகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க இரண்டு தனிப்­ப­டை­கள் அமைக்கப்பட்டுள்ளன.