ஆறு மாத பெண் குழந்தையை நரபலி கொடுத்த மூவர் கைது

ஆறு மாத பெண் குழந்தையை நரபலி கொடுத்த மூவர் கைது

1 mins read
e2e723a1-59fc-4415-974c-9bda744846d3
-

பேரா­வூ­ரணி: மந்­தி­ர­வா­தி­யின் பேச்­சைக் கேட்டு பெண் ஒரு­வர், தனது அக்காள் மக­னின் ஆறு மாதப் பெண் குழந்­தையை நர­பலி கொடுத்­துள்ளார். இச்சம்பவம் ெதாடர்­பில் மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

தஞ்­சா­வூர் மாவட்­டம், மல்­லிப்­பட்­டி­னத்­தைச் சேர்ந்­த­வர் நசு­ரு­தீன். இவ­ரது மனைவி ஷாலிகா. இவர்களுக்கு ஆறு மாதத்­தில் பெண் குழந்தை இருந்தது.

இந்­நி­லை­யில், சம்­ப­வத்­தன்று தூங்­கிக்கொண்­டி­ருந்த குழந்­தை­ காண­ாமல் போகவே கணவனும் மனைவியும் அதிர்ச்­சி­ய­டைந்து வீடு முழு­வ­தும் குழந்­தையைத் தேடி னர். அப்­போது வீட்­டின் பின்­பு­றம் உள்ள மீன்­வ­ளர்க்­கும் தொட்­டி­யில் குழந்தை இறந்து கிடக்க, சட­லத்தை புதைத்து­விட்­ட­னர்.

தக­வ­ல­றிந்த காவல்துறை அதி­கா­ரி­கள் விசா­ர­ணை­க்குப் பிறகு கூறு­கை­யில், "நசு­ரு­தீன் சின்­னம்மா ஷர்­மிளா பேகம், 48. இவ­ரது கண­வர் அசா­ரு­தீ­னுக்கு அடிக்­கடி உடல் நலம் சரி­யில்­லா­மல் இருந்துள்ளது.

"உடல்­நிலை சரி­யாக உயிர்ப்பலி கொடுக்­க­வேண்­டும் என்று புதுக்­கோட்டை மாவட்­டம், கிருஷ்­ணாஜி­பட்­டி­னத்­தில் குறி­சொல்­லும் முக­மது சலீம், 48, கூறி­யுள்­ளார். இத­னால் குழந்­தையை நள்­ளி­ர­வில் தூக்கிச் சென்று தண்­ணீர் உள்ள மீன்­தொட்­டி­யில் அமுக்­கிக் கொன்­றுள்ளனர்," என்­ற­னர்.

குழந்­தை­யின் சட­லம் நேற்று தோண்டி எடுக்­கப்­பட்டு உடற்­கூறு ஆய்வு செய்­யப்­பட்­டது. இது­குறித்து சேது­பா­வா­சத்­தி­ரம் காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து ஷர்­மிளா பேகம், அவ­ரது கண­வர் அசா­ரு­தீன், குறி­சொல்­லும் முக­மது சலீம் ஆகி­யோரை நேற்று கைது செய்­த­னர்.