2,350 பேர் மீது வழக்குப் பதிவு

2,350 பேர் மீது வழக்குப் பதிவு

1 mins read
734adef3-b219-4876-83de-5c9a46f2c682
-

தென்காசி: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மொத்தம் 2,350 அதிமுகவினர் மீது அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்று மாநிலம் முழுவதும் வெள்ளி அன்று அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி வழங்க வில்லை. ஆனால், தடையை மீறி நெல்லை ரயில் நிலையம், தென்காசி புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் அதிமுகவினர் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.