நடத்துநரைத் தாக்கிய மாணவர்கள்: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

நடத்துநரைத் தாக்கிய மாணவர்கள்: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

2 mins read
8fdca6c3-d3dc-4caa-b71c-51dadad3d819
-

சென்னை: மாநக­ரப் பேருந்து ஊழி­யரை பள்ளி மாண­வர்­கள் தாக்­கி­யதை அடுத்து சென்­னை­யில் போக்­கு­வ­ரத்து ஊழி­யர்­கள் திடீர் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். இத­னால் போக்­கு­வ­ரத்து நிலை­குத்­தி­யது.

சென்­னை­யில் பள்ளி மாணவர்­கள் சிலர் பேருந்துப் படி­களில் தொங்­கி­ய­படி செல்­வதை வாடிக்கை­யா­கக் கொண்­டுள்­ள­னர். இது ஒரு­வித சாக­சம் என்ற தவ­றான புரி­தல் அவர்­க­ளி­டம் உள்­ளது.

நேற்று முன்­தி­னம் அண்ணா சதுக்­கம் பகு­தி­யில் இருந்து பெரம்­பூர் நோக்­கிச் சென்று கொண்­டி­ருந்த மாந­க­ரப் பேருந்­தில் புர­சை­வாக்­கம் பகு­தியைச் சேர்ந்த மாண­வர்­கள் பலர் ஏறி­யுள்­ள­னர். அவர்­களில் பத்து பேர் பேருந்து படி­களில் தொங்கி­ய­வாறு, ஆபத்­தான முறை­யில் பய­ணம் செய்­த­தைக் கண்ட ஓட்­டு­நர், அனை­வ­ரை­யும் பேருந்­துக்­குள் வரு­மாறு கூறி­யுள்­ளார்.

ஆனால் அதைக் கண்­டு­கொள்­ளாத மாண­வர்்­கள் பாடல்­க­ளைப் பாடி ரக­ளை­யில் ஈடு­பட்­ட­தா­கத் தெரி­கிறது. இத­னால் ஆவே­ச­ம­டைந்த பெண் பயணி ஒரு­வர் அவர்­க­ளைத் தட்­டிக்­கேட்க, பதி­லுக்கு அவரை தகாத வார்த்­தை­க­ளைக் கொண்டு ஏசிய மாண­வர்­கள், பின்­னர் அவரை தாக்­கி­ய­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இதில் அந்­தப் பெண்­மணி காய­ம­டைந்து பேருந்­தி­லேயே மயக்­க­ம­டைந்­தார். பத­றிப்­போன ஓட்­டு­ந­ரும் நடந்­து­ந­ரும் மாண­வர்­க­ளி­டம் வாக்கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­னர். அப்­போது மாண­வர்­களில் சிலர் திடீ­ரென கற்­க­ளைக் கொண்டு நடத்­து­ந­ரைத் தாக்­கி­னர். பின்­னர் அனை­வ­ரும் தப்­பி­யோ­டி­னர்.

இந்­நி­லை­யில் காய­ம­டைந்த நடத்­து­ந­ரும் ஓட்­டு­ந­ரும் பேருந்தை சாலை­யில் நிறுத்­தி­விட்டு மறி­யல் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். பயணி­களில் சில­ரும் அவர்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்­த­னர்.

இதைக்­கண்டு அவ்­வ­ழியே சென்ற எழு­ப­துக்­கும் மேற்­பட்ட பேருந்­து­க­ளின் ஓட்­டு­நர், நடத்­து­நர்­களும் சில இடங்­களில் இதர போக்­கு­வ­ரத்து ஊழி­யர்­களும் மாண­வர்­க­ளைக் கண்­டித்­தும் அவர்­க­ளைக் கைது செய்ய வலியு­றுத்­தி­யும் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். இத­னால் சுமார் இரண்டு கிலோ மீட்­டர் தூரத்­துக்கு மாந­க­ரப் பேருந்­து­கள் வரி­சை­யாக நிறுத்தி வைக்­கப்­பட்டன.

இத­னால் போக்­கு­வ­ரத்து நிலை­குத்­தி­யது. விரைந்து வந்த காவல்­துறை உய­ர­தி­கா­ரி­கள், சம்­பந்­தப்­பட்ட மாண­வர்­கள் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என உறுதி அளித்­ததை அடுத்து, போராட்­டம் கைவி­டப்­பட்­டது.