ராமேசுவரம்: இரு வெவ்வேறு சம்பவங்களில் ராமேசுவரம் மீனவர்கள் 54 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அப்பகுதியில் இலங்கை கடற்படை வழக்கமான சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் அப்போது ஆறு படகுகளையும் அவற்றில் இருந்த 42 மீனவர்களையும் கடற்படையினர் சுற்றி வளைத்ததாகக் கூறப்படுகிறது. மற்றொரு சம்பவத்தில் 12 பேர் கைதாகினர்.
கடந்த சனிக்கிழமை இரவு மீனவர்கள் சட்டவிரோதமாக இலங்கை கடற் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததால் கைது செய்யப்பட்டதாக கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர் கைது பின்னணியில் சீனா இருப்பதாக தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. நேற்று ராமேசுவரத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

