கோவை: தவறு செய்தவர்கள், கொள்ளையடித்தவர்கள் யாராக இருந்தாலும் திமுக ஆட்சியில் அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை மரியாதைக் குறைவாகப் பேசுவது தவறு என்றார்.
"அண்மையில் அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது அரசு, காவல்துறை அதிகாரிகளை ஒருமையில் பேசியுள்ளனர். அந்தப் பேச்சுகள் முகம் சுளிக்கும் அளவுக்கு இருந்தது. கடந்த காலங்களில் அவர்கள் செய்த தவறுகளை மறைத்துப் பேசியுள்ளனர்.
"இனிமேல் அதிமுகவினர் அரசு அதிகாரிகள், காவல்துறையினரை ஒருமையில் பேசினால் அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

