ஈழத் தமிழர் மீது சீனா திடீர் பாசம்: ராமதாஸ் எச்சரிக்கை

ஈழத் தமிழர் மீது சீனா திடீர் பாசம்: ராமதாஸ் எச்சரிக்கை

1 mins read
1e30e5da-0ee4-4116-9031-4d29bb731bfc
-

சென்னை: இலங்­கைத் தமி­ழர்­களுக்கு எதி­ரான இன அழிப்புப் போருக்கு அனைத்து வகை­களிலும் உத­வி­ய சீன அரசு, இப்­போது திடீ­ரென ஈழத்­த­மி­ழர்­கள் மீது பாசம் காட்­டு­வ­தன் பின்­னணி­யில் திட்­ட­மி­டப்­பட்ட கணக்­கு­கள் உள்­ள­தாக பாமக நிறு­வ­னர் ராம­தாஸ் தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில், சீனா­வை­யும், சிங்­க­ளத்­தை­யும் எதி­ரி­யா­கப் பார்க்­கும் இலங்­கைத் தமி­ழர்­கள் மத்தி­யில் தனக்கு நற்­பெ­யரை ஏற்­ப­டுத்­திக்கொண்டு, இலங்­கை­யின் வடக்­குப் பகு­தி­யி­லும் கால்­பதித்து இந்­தி­யா­வுக்கு நெருக்­கடி தர வேண்­டும் என்­பது தான் சீனா­வின் நோக்­கம் என்­றும் அவர் குற்­றம்­சாட்டி உள்­ளார்.

அந்­தத் திட்­டத்­தின் ஓர் அங்­க­மா­கவே, அண்­மை­யில் சீனத் தூதர் தமி­ழ­ரா­கவே மாறி ஆலய வழி­பாடு நடத்தி, தமிழ் மீன­வர்­களுக்கு உத­வி­களை வழங்கி, நல்­லெண்­ணத்தை ஏற்­ப­டுத்­து­வதற்­கான நாட­கத்தை அரங்­கேற்றி இருப்­ப­தா­க­வும் ராம­தாஸ் தமது அறிக்கையில் மேலும் தெரி­வித்­துள்­ளார்.