பிச்சை பணத்தை பிரிப்பதில் தகராறு: தம்பதியர் கொலை

பிச்சை பணத்தை பிரிப்பதில் தகராறு: தம்பதியர் கொலை

1 mins read
f3207376-2bc6-4055-b9c4-7d7c3c7e1719
-

ராமே­சுவரம்: பிச்சை எடுத்த பணத்­தைப் பிரித்­துக்கொள்வதில் ஏற்­பட்ட தக­ராறு கார­ண­மாக கணவன், மனைவி கொல்­லப்­பட்ட சம்­ப­வம் ராமே­சு­வ­ரத்­தில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

விழுப்­பு­ரத்­தைச் சேர்ந்த 50 வய­தான வேல்­மு­ரு­க­னும் 42 வய­தான அவ­ரது மனைவி ராமு­வும் கடந்த பல ஆண்­டு­க­ளாக கோவில்­கள் அருகே பிச்சை எடுத்து, அதில் கிடைக்­கும் பணத்தை வைத்து வாழ்க்கை நடத்தி வந்­துள்­ள­னர்.

ராமே­சு­வ­ரம் கோவில் ரத வீதியில் இவர்­க­ளு­டன் மேலும் சில­ரும் பிச்சை எடுத்து வந்­த­தாகத் தெரி­கிறது. தங்­க­ளுக்­குள் பிரச்­சினை வந்து­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக பிச்­சைக்­கா­ரர்­கள் அனை­வ­ரும் தங்­க­ளுக்­குள் சில விதி­மு­றை­களை வகுத்­துக்­கொண்டு, அதன்படி செயல்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இரவு நேரங்­களில் கோவி­லின் கிழக்­குப் பகு­தி­யில் உள்ள திறந்­த­வெ­ளிக் கூடத்­தில் ஓய்­வெ­டுப்­பது­தான் இவர்­க­ளின் வழக்­க­மாக இருந்­துள்­ளது. இந்­நி­லை­யில் கடந்த 17ஆம் தேதி நள்­ளி­ரவு வேளை­யில் வேல்­மு­ரு­க­னும் ராமு­வும் அந்­தக் கூடத்­தில் ரத்த வெள்­ளத்­தில் இறந்து கிடந்­ததைக் கண்டு பிச்­சைக்­கா­ரர்­கள் அதிர்ச்சி அடைந்­த­னர்.

காவல்­துறை விசா­ரணை நடத்­தி­ய­தில், பிச்­சைக்­கா­ரர்­களில் ஒரு­வர்­தான் கொலை­யாளி எனத் தெரி­ய­வந்­துள்­ளது.

பக்தர்களிடம் பிச்சையாக பெற்ற பணத்தை பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக, அடையாளம் தெரியாத ஒரு பிச்சைக்காரர் இருவரையும் கொலை செய்துள்ளார்.