பொங்கல் தொகுப்புடன் மண் பானை, மண் அடுப்பு வழங்க கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் பொங்கல் திருநாளையொட்டி ஜனவரி 3ஆம் தேதி முதல் 21 பொருள்களுடன் அரிசி, பருப்பு, வெல்லம், அரிசி, சர்க்கரை கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதனுடன் சேர்த்து மண்பானை, மண் அடுப்பையும் வழங்கி 40 லட்சம் மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று முதல்வருக்கு மண்பாண்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
543 ரயில் நிலையங்களில்
இலவச வைஃபை வசதி
சென்னை: சென்னை சென்ட்ரல், எழும்பூா் உள்பட 543 ரயில் நிலையங்களில் இலவச அதிவேக வைஃபை வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த ரயில் நிலையங்களில் வைஃபை வசதியைப் பயன்படுத்து பவா்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது வரை 6,070க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தும் பணியும் நடைபெற்று வருவதாக ரயில்வே நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.
ஒரு லட்சம் மாணவர்களுக்கு மழைநீர் புகா ஆடை, காலணிகள்
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம், சீருடைகள் வழங்கப்படுவதைப் போலவே பள்ளிக்கூடம் திறந்ததும் மழை நீர் புகா ஆடை, கணுக்கால் வரையிலான காலணிகளையும் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மழைப்பொழிவு அதிகம் உள்ள மாவட்டங்கள், மலைப்பிரதேச மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஒரு லட்சம் பேருக்கு முதற்கட்டமாக மழை நீர் புகா ஆடை, காலணிகள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

