கோவை: தாங்கள் சொல்லும் இடத்திற்கு அரசுப் பேருந்தை இயக்காத தால், ஆத்திரமடைந்த மூன்று இளையர்கள் நடத்துநரைக் கத்தியால் குத்தினர். அவர் தற்போது மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார்.
குற்றத்தில் ஈடுபட்ட இளையர்களைக் கைது செய்யாவிடில் பேருந்துகளை இயக்கமாட்டோம் என்று இதர பேருந்து நடத்துநர்களும் ஓட்டுநர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நடத்துநரை கத்தியால் குத்திய அஜித், 24, இருகூரைச் சேர்ந்த சூர்யா, 19, ஆகிய இருவரை சிங்காநல்லூர் காவல்துறையினர் கைது செய்தனர். நீலிக்கோணாம்பாளையத்தைச் சேர்ந்த மனோஜ், 23, என்பவரைத் தேடிவருகின்றனர்.
கோவை மாவட்டம், சிங்காநல்லுாரில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் இரவு பயணத்தை முடித்துவிட்டு பேருந்துகளை நிறுத்திவைக்கும் ஒண்டிப்புதுார் 'டெப்போ'வை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
அதில், ஓட்டுநர் முருகவேல், 40, நடத்துநர் கவியரசன், 34, ஆகியோர் மட்டுமே இருந்தனர்.
அப்போது, வழியில் மூன்று இளையர்கள் பேருந்தில் ஏறினர். குடிபோதையில் இருந்த அவர்கள், நடத்துநரிடம் பேருந்தை சூலூருக்கு ஓட்டும்படி மிரட்டினர்.
இதற்கு மறுத்த நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை சரமாரியாக கத்தியால் கீறிவிட்டு, பேருந்தின் பக்கவாட்டு கண் ணாடியை உடைத்துக்கொண்டு தப்பியோடினர்.
நடத்துநரை ஓட்டுநர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.
இதைத்தொடர்ந்து ஒண்டிப்புதூர் டெப்போவில் உள்ள அரசுப் பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் கத்தியால் குத்திய வாலிபர்களைக் கைது செய்யும்வரை ேபருந்துகளை இயக்கமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

