தங்கமணிக்கு சொந்தமான 14 வீடுகளில் மீண்டும் ேசாதனை

தங்கமணிக்கு சொந்தமான 14 வீடுகளில் மீண்டும் ேசாதனை

2 mins read
b74347fa-1d56-4999-9e34-9861655b0750
தங்­க­மணி. படம்: ஊடகம் -

சென்னை: அதி­முக முன்­னாள் அமைச்­சர் தங்­க­மணி சம்­பந்­தப்­பட்ட 14 புதிய இடங்­களில் லஞ்ச ஒழிப்­புக் காவல்­து­றை­யி­னர் நேற்று மீண்­டும் சோத­னையை முடுக்கிவிட்­ட­னர்.

நாமக்­கல் மாவட்­டத்­தில் 10 இடங்­கள், ஈரோடு மாவட்­டத்­தில் மூன்று இடங்­கள், சேலம் மாவட்­டத்­தில் ஓரி­டம் என மொத்­தம் 14 இடங்­களில் இந்­தச் சோத­னை­கள் தொடர்­வ­தாக தமி­ழக ஊட­கத் தக­வல்­கள் தெரி­வித்­தி­ருந்­தன.

கடந்த 15ஆம் தேதி அன்று தங்­க­ம­ணிக்­கும் அவ­ரது உற­வி­னர் களுக்­கும் சொந்­த­மான 69 இடங்­களில் நடத்­தப்­பட்ட முதற்­கட்ட சோத­னை­யில் கிடைக்­கப்­பெற்ற ஆவ­ணங்­க­ளின் அடிப்­ப­டை­யில் மீண்­டும் நேற்று தங்­க­ளது சோதனை யைத் தொடர்ந்­த­தாக லஞ்ச ஒழிப்பு காவல்­து­றை­யி­னர் கூறி­னர்.

கடந்­த­முறை நடத்­தப்­பட்ட சோத­னை­யில் ரூ.2.16 கோடி பணம், 1.13 கிலோ தங்­கம், சொத்து ஆவ­ணங்­கள் உள்­ளிட்­டவை கைப்பற்­றப்­பட்­ட­தாக லஞ்ச ஒழிப்­புத் துறை­யி­னர் கூறி­யி­ருந்­த­னர்.

ஆனால், இதனை மறுத்­தி­ருந்த தங்­க­மணி, "என் வீட்­டி­லி­ருந்து ஒரு கைபே­சி­யைத் தவிர வேறு எந்த ஆவ­ண­மும் பறி­மு­தல் செய்­யப்பட­வில்லை. இரண்டு கோடி ரூபாய், ஒரு கிலோ தங்­கம் என்­ப­தெல்­லாம் கட்­டுக்­கதை," என்று கூறி­யி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், நேற்று மீண்­டும் இச்சோதனை நடவடிக்கைகள் ெதாடர்ந்தன.

கடந்த ஐந்­தாண்­டு­களில் வரு­மா­னத்­துக்கு அதி­க­மாக ரூ.4.85 கோடி சொத்து குவித்­த­தாக தங்க மணி மீதும் அவ­ரது மனைவி சாந்தி, மகன் தர­ணி­த­ரன் மீதும் நாமக்­கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்­து­றை­யி­னர் ஏற்கெனவே வழக்­குப்­ப­திவு செய்­துள்ளனர்.

திமுக பொறுப்பேற்றது முதல் அதி­முக முன்­னாள் அமைச்­சர்­கள் எஸ் பி வேலு­மணி, சி விஜ­ய­பாஸ்­கர், கே சி வீர­மணி, எம்­ஆர் விஜ­ய­பாஸ்­கரை அடுத்து ஐந்தாவதாக லஞ்ச ஒழிப்­புத் துறை­யி­னரின் பிடியில் சிக்கியுள்ளார் தங்­க­மணி.