சென்னை, பெங்களூரு, கோவை மையங்கள் செலவுக் குறைப்பால் இடம் மாறுகின்றன தொழில்நுட்ப நிறுவனங்களை அதிகளவில் ஈர்க்கும் மதுரை

சென்னை, பெங்களூரு, கோவை மையங்கள் செலவுக் குறைப்பால் இடம் மாறுகின்றன தொழில்நுட்ப நிறுவனங்களை அதிகளவில் ஈர்க்கும் மதுரை

2 mins read
bb4399a1-33a1-4227-867c-90a3b56c41bb
மதுரையைச் சேர்ந்த தொழில்முனைவர்கள் தொழில்நுட்ப நிறுவனத்தை இயக்குவதற்கான செலவுத்ெதாகை மதுரையில் குறைவாக இருப்பதால் மற்ற நகரங்களில் இருந்து மீண்டும் மதுரைக்கே திரும்பத் தொடங்கியுள்ளனர். படம்: ஊடகம் -

மதுரை: தமிழ்­நாட்­டின் தென்­புற மாந­க­ரான மதுரை, அதிக அளவி லான தொழில்­நுட்ப நிறு­வ­னங்­களை ஈர்க்­கத் தொடங்­கி­யுள்­ளது. இதற்கு தொழில்­மு­னை­வர்­க­ளுக்கு ஆகும் செல­வுக் குறைப்பே முக்­கிய கார­ண­மா­கக் கூறப்­ப­டு­கிறது.

கடந்த ஓர் ஆண்­டாக சென்னை, பெங்­க­ளூ­ரில் இயங்­கும் அதி­க­மான தொழில்­நுட்ப நிறு வனங்­கள் மது­ரை­யில் அலு­வல கங்­களை நிறுவி வரு­கின்­றன.

கோயம்­புத்­தூர் போன்ற நக­ரங்­களை விட­வும் மது­ரை­யில் ெதாழில்­நுட்­பப் பூங்­காவை செயல்­ப­டுத்­து­வ­தற்­கான செலவுத்ெதாகை 20% குறைவு என்­றும் வட்­டார நிபு­ணர்­கள் கூறி­யுள்­ள­னர்.

இதனால், தலை­ந­கர் சென்னை, பெங்­க­ளூரு மாந­க­ரில் பணி­பு­ரி­யும் மது­ரை­யைச் சேர்ந்த தொழில் வல்­லு­நர்­கள் மது­ரைக்கே மீண்­டும் திரும்பி தங்­கள் சொந்த தொழில் களைத் தொடங்க ஆர்­வம் காட்டு வதா­க­வும் டைம்ஸ் ஆஃப் இந்­தியா ஊட­கம் தெரி­வித்­துள்­ளது.

சென்­னை­யைத் தள­மா­கக் கொண்ட தொழில்­நுட்ப நிறு­வன மான கோஃபுரூ­கல் அண்­மை­யில் மது­ரை­யில் 15,000 சதுர அடி­யில் 90 பேர் பணி­பு­ரி­யும் அலு­வ­ல­கத்­தைத் தொடங்­கி­யுள்­ளது. அத்­து­டன், மேலும் 60 பேரை வேலைக்கு அமர்த்த திட்­ட­மிட்­டுள்­ள­தாக இந்­நி­று­வ­னத்­தின் தலை­வர் குமார் வேம்பு தெரி­வித்­துள்­ளார்.

மனி­த­வ­ளத் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான நீயாமோ, மது­ரை­யில் எல்­காட் தக­வல் தொழில்­நுட்ப மையத்தை அமைத்­துள்­ளது. அண்­மை­யில் 65,000 சதுர அடி அலு­வ­ல­கத்­தைத் திறந்து, வரும் ஆண்­டுக்­குள் 1,200 ஊழி­யர்­களை பணி­ய­மர்த்­த­வும் திட்­ட­மிட்­டுள்­ளது.

"சென்னை அல்­லது சிலிக்­கான் பள்­ளத்­தாக்­கில் இருப்­ப­தைப் போலவே அதி­ந­வீன தயா­ரிப்­பு­களை மது­ரை­யி­லும் உரு­வாக்­கு­கி­றோம். பணி­யா­ளர்­கள் பெரு­ந­க­ரங்­க­ளுக்கு இடம்­பெ­யர்­வ­தைத் தடுக்­கும் வகை­யில் அவர்­க­ளுக்கு போதிய அளவு சம்­ப­ள­மும் கொடுக்­கி­றோம்," என்­கி­றார் நீயாமோ நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி ரங்­க­ரா­ஜன் சேஷாத்ரி.

"சென்னை, பெங்­க­ளூரு போன்ற பல்­வேறு நக­ரங்­களில் தொழில்­நுட்­பப் பூங்­கா­வைத் தொடங்க நினைத்­தேன். போக்­கு­வ­ரத்து நெரி­சல் கார­ண­மாக அதைக் கைவிட்­டு­விட்ே­டன். ஆனால், மது­ரை­யில் எங்கு வேண்­டு­மா­னா­லும் 10 நிமி­டத்­தில் பய­ணித்­து­வி­டு­வேன்,'' என்­கி­றார் தொழி­ல­தி­பர் கல்­யா­ண­சுந்­த­ரம்.

ஹெச்­சி­எல் தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னம் தற்­ச­ம­யம் 5,400 ஊழி­யர்­க­ளைப் பணி­ய­மர்த்­து­கிறது. இந்த மதுரை மையம் கிள­வுட் நேட்­டிவ், நெட், ஃபுல் ஸ்டேக் மற்­றும் பிற நவீன தொழில்­நுட்­பத் துறை­யி­ன­ரு­டன் உல­க­ளா­விய வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு சேவை வழங்­கு­கிறது.

எச்­சி­எல் ெதாழில்­நுட்ப நிறு­வ­னத்­தின் துணைத் தலை­வர் ஸ்ரீமதி சிவ­சங்­கர் கூறு­கை­யில், நக­ரத்­தில் உள்ள பொறி­யா­ளர்­க­ளை­யும் இதர திற­மை­சா­லி­க­ளை­யும் தொடர்ந்து பணி­ய­மர்த்­து­வோம் என்­கி­றார்.

தொழில்­நுட்­பத்­தால் இயங்­கும் ஆரஞ்சு ரீடெய்ல் நிறு­வ­னத்­தின் நிறு­வ­ன­ரும் மதுரை நக­ரைச் சேர்ந்­த­வ­ரு­மான எபி­னே­சர் டேனி­யல் கூறுைக­யில், "இங்­குள்ள திற­மை­சா­லி­கள் புதிய திறன்­க­ளைக் கற்­றுக்­கொண்டு சிறந்து விளங்­கு­வ­தற்­கான சரி­யான அணு­கு­முறை யையும் ஆர்­வத்­தை­யும் கொண்­டுள்­ள­னர்" என்­கி­றார்.