சிகிச்சை: பார்வை திரும்பியது

சிகிச்சை: பார்வை திரும்பியது

1 mins read
5405db8f-8109-49fe-aece-87a3dd5ef822
-

நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் வசித்து வரும் கும்கி யானை சேரனுக்கு, 35, பல ஆண்டுகளாகவே வலது கண்ணில் பார்வை இல்லை. கடந்த ஜூன் மாதம் பாகன் தாக்கியதால் அதன் இடது கண் பார்வையும் பறிபோனது. இந்நிலையில், முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தொடர்ந்து அளித்து வந்த சிகிச்சையின் பலனாக இடது கண் பார்வை திரும்பி உள்ளதால், தனது அன்றாடப் பணிகளை யானையே கவனித்துக் கொள்கிறது. இதனால், மகிழ்ச்சி அடைந்துள்ள வனத்துறையினர் "இது அபூர்வமான மாற்றம்," என்கின்றனர். படம்: ஊடகம்