தென்காசி: ஒன்பது மாதங்களுக்குப் பிறகு குற்றால அருவிகளில் குளிப்பதற்கு நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுப் பயணிகள், வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
கொரோனா கிருமிப்பரவல் காரணமாகவும் வெள்ளப் பெருக்கின் காரணமாகவும் கடந்த எட்டு மாதங்களாக சுற்றுப்பயணிகள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இந்நிலையில், இப்போது கிருமிப் பரவல் ஒரு கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து காலை 6 முதல் மாலை 6 மணி வரை குளிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது மாவட்ட நிர்வாகம்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பேரருவி, ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றால அருவி, புலியருவி உள்ளிட்டவற்றில் இனி சுற்றுப்பயணிகள் குளிக்கலாம். ஆனால், அருவியில் குளிக்க வருவோரிடம் இரண்டு தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் இருத்தல் அவசியம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், பயணிகள் கூட்டம் அலைமோதுவதாக தகவல்.

