சிங்க முகமூடி கொள்ளையர் சிக்கினார்; யூடியூப் பார்த்து திருடியதாக வாக்குமூலம் இடுகாட்டில் புதைக்கப்பட்ட 16 கிலோ நகைகள் மீட்பு

சிங்க முகமூடி கொள்ளையர் சிக்கினார்; யூடியூப் பார்த்து திருடியதாக வாக்குமூலம் இடுகாட்டில் புதைக்கப்பட்ட 16 கிலோ நகைகள் மீட்பு

2 mins read
735b06b0-774d-4fdf-8f00-549b8240880e
சிங்க முகமூடி கொள்ளையர் டீக்காராமன். -
multi-img1 of 2

வேலூர்: வேலூர் மாவட்­டத்­தில் உள்ள பிர­பல நகைக்­க­டை­யில் சிங்க முக­மூ­டி­யைப் போட்­டுக்­கொண்டு தனி ஒரு­வ­ராக கொள்­ளை­ய­டித்த டீக்­கா­ரா­மன் என்ற திரு­டரை ஐந்து நாள்­க­ளுக்­குப் பிறகு வேலூர் மாவட்ட காவல்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.

இடு­காட்­டில் மூன்று இடங்­களில் அவர் புதைத்து வைத்­தி­ருந்த எட்டு கோடி மதிப்­பி­லான 16 கிலோ தங்க, வைர நகை­களும் மீட்­கப்­பட்­டன.

தான் ஒரு கட்­ட­டம் கட்­டும் கொத்­த­னார் என்­ப­தால், கான்­கி­ரீட் சுவ­ரில் கன­கச்­சி­த­மா­கத் துளை­யிட்டு கள­வா­டி­ய­தா­க­வும் யூடி­யூப் காணொ­ளி­க­ளைப் பார்த்து கொள்­ளை­ய­டிக்­க கற்­றுக்­கொண்­ட­தா­க­வும் டீக்­கா­ரா­மன் வாக்­கு­மூ­லம் அளித்­துள்­ளார்.

வேலூர், தோட்­டப்­பா­ளை­யத்­தில் உள்ள ஜோஸ் ஆலுக்­காஸ் நகைக்­க­டை­யில் இம்மாதம் 15ஆம் தேதி நள்­ளி­ர­வில் 16 கிலோ நகை­கள் களவு போனது.

இந்­நி­லை­யில், சிசி­டிவி காட்­சி­கள் மூலம் வேலூர் மாவட்­டம், ஒடுக்­கத்­தூரை அடுத்த குச்­சிப்­பா­ளை­யம் பகு­தி­யைச் சேர்ந்த டீக்­கா­ரா­மன் சிக்­கி­யுள்­ளார்.

இது­குறித்து, வேலூர் காவல்­துறை துணைத் தலை­வர் ஏ.ஜி.பாபு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறு­கை­யில், "எட்டு தனிப்­ப­டை­கள் அமைத்து, ஆறு நாள்­க­ளி­ல் குற்­ற­வா­ளி­யைக் கைது செய்து, எட்டு கோடி ரூபாய் மதிப்­பி­லான 16 கிலோ தங்­கம், வைர நகை­களை மீட்­டுள்ளோம்.

"22 வய­தான டீக்­கா­ரா­மன் இக் குற்­றச்செயலில் ஈடு­பட்­டுள்­ளார்.

"இடு­காட்­டில் மறைத்து வைத்­தி­ருந்த நகை­கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தச் சம்­ப­வத்­தில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா? என விசா­ரணை செய்து வரு­கி­றோம்," என்­றார்.

காவல்­துறை கண்­கா­ணிப்­பா­ளர் ராஜேஷ்­கண்ணா கூறு­கை­யில், "பத்து நாள்­களாக ஒவ்­வொரு இர­வி­லும் வந்து பொறு­மை­யா­க சுவரைத் துளை­யிட்டு கொள்­ளைச் சம்­ப­வத்தை கொள்­ளை­யன் அரங்­கேற்­றி­யுள்­ளார். 'சப்­த­மின்றி துளை­யி­டு­வது எப்­படி' என்­றும் இதற்கு முன்பு அரங்கேறிய பெரும் கொள்ளைச் சம்­ப­வங்­களில் நடந்த தவறுகள் இனி நேராமல் இருக்கவும் யூடி­யூப்­பில் உள்ள காணொ­ளிகளைப் ­பார்த்­து ெகாள்ளையடிக்க கற்றுக்­ கொண்­டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

"குற்­ற­வாளி ஒரு சிவன் பக்­தன். ஆகவே, கொள்­ளை­ய­டித்த நகை­யில் இருந்த ருத்­ராட்ச மாலையை மட்­டும் தன்­னி­டம் வைத்­துக்­கொண்டு மற்­ற­வற்றை புதைத்து வைத்­தி­ருந்­தார். முத­லில் கிடைத்த ருத்­ராட்ச மாலை மூலம் கொள்­ளை­யனை பிடித்­தோம்," என்­றார்.